முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-ம் ஆண்டு நினைவு தினம் – ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் காங். தலைவர்கள் அஞ்சலி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி, ராஜீவ் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இளநீர், பழ வகைகள், உணவுப் பொருட்கள் படையலாக வைக்கப்பட்டிருந்தன. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகள், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையிலான கட்சியினர் திருவொற்றியூரில் இருந்து யாத்திரையாகக் கொண்டுவந்த ராஜீவ் ஜோதி, … Read more

தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கு: புரோக்கிங் நிறுவனங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: தேசியப் பங்குச் சந்தை கோ – லொக்கேஷன் வழக்கில் தொடர்புடைய புரோக்கிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, நொய்டா, காந்திநகர், குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் 10 மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கோ-லொக்கேஷன் வழக்குத் தொடர்பாக கடந்த மாதம் தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா மீதும், முன்னாள் குழும செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகைத் தாக்கல் … Read more

கழிவு மேலாண்மைக் கழகம் ஏற்படுத்த திட்டம் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நகர்ப்புற காற்றுத் தர மேம்பாடு தொடர்பான பயிலரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த இடங்களை மீட்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சிகளில் நிலவும் கழிவு … Read more

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அளித்த வீரர் கைது

ஜெய்ப்பூர்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். ராணுவ வீரரான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளார். கடந்த சில நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 18-ம் தேதி அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராணுவ செவிலியர் சேவை … Read more

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு 40,000 டன் டீசலை அனுப்பியது இந்தியா

கொழும்பு: இலங்கைக்கு, கடனுதவி திட்டத் தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை இந்தியா நேற்று வழங்கியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்ய, இந்தியா கடந்த மாதம் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியை வழங்கியது. இலங்கை திவால் நிலையில் உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் இலங்கைக்கு கடனுதவி திட்டத்தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை அனுப்புவதாக இலங்கையில் உள்ள … Read more

ரேசர்பே நிறுவனத்தில் ரூ.7.3 கோடி திருட்டு – பெங்களூரு சைபர் கிரைம் போலீஸில் புகார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள முன்னணி பேமெண்ட் நிறுவனமான ரேசர்பே நிறுவனத்தில் ஹேக்கர்கள் ரூ.7.3 கோடி திருட்டை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைத்து தளத்திலும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான ரேசர்பே நிறுவனத்தில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. ரேசர்பே நிறுவனத்தின் மென்பொருள் அங்கீகார செயல்முறையை ஹேக்கிங் செய்து ரூ. 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று அந்நிறுவனம் சார்பில் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தரப்பட்டுள்ளது. கடந்த 16-ம் … Read more

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே 24-ம் தேதி திறப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ம் தேதி முதல் நீர் திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.35 அடி, நீர் இருப்பு 86.25 டிஎம்சியாக உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை … Read more

இந்திய ஜனநாயகம் உடைந்தால் உலகத்துக்கே ஆபத்து – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: பிரிட்ஜ் இந்தியா அமைப்பின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் ‘இந்தியாவுக்கான யோசனைகள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மஹூ மொய்த்ரா உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறியதாவது: இந்தியாவில் 2 விதமான வடிவமைப்புகள் உள்ளன. ஒன்று கூச்சலிடுவது, மக்களின் குரல்களை ஒடுக்குவது. அதை … Read more

கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசிய எம்.பி.: சமூக வலைதளங்களில் வைரலான‌ வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சந்திரா ஆர்யா, கனடா நாடாளுமன்ற‌ அவையில் முதல் முறையாக கன்னடத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கர்நாடகாவின் துமக்கூரு மாவட்டம், சிரா தாலுகா துவகூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா ஆர்யா (59). எம்பிஏ படித்த இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக கனடாவில் குடியேறினார். கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஒன்டாரியோவில் உள்ள நேப்பியன் தொகுதியில் போட்டியிட்டு கனடாவின் கீழ் சபைக்கு தேர்வு ஆனார். சந்திரா … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 22-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 23, 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு … Read more