பயங்கரவாதத்துக்கு நிதி | யாசின் மாலிக் குற்றவாளி: டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால் அவர் குற்றவாளி என்று டெல்லி என்ஐஏ நீதிமன்றம் ( தேசிய புலானாய்வு அமைப்பு நீதிமன்றம்) தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு இந்த வழக்கில் என்ன தண்டனை என்ற விவரம் வரும் 25 ஆம் தேதி (மே 25) தெரிவிக்கப்படும். தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் ‘பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டி’ தந்த குற்றச்சாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு … Read more

இடம் மாறுகிறது மெரினா கடற்கரை காந்தி சிலை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக, மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால், ‘காந்தி சிலை’ சேதமடைவதைத் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, மெரினா காந்தி சிலையை … Read more

நவ்ஜோத் சித்துவுக்கு ஓர் ஆண்டு சிறை: 34 ஆண்டு கால வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: காரை பார்க்கிங் செய்வதில் நடந்த மோதலில் 65 வயது நபர் பலியானது தொடர்பாக 34 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். சித்து சிறைக்குச் செல்வது உறுதியாகியுள்ளது. Will submit to the majesty of law …. — Navjot … Read more

திருப்பத்தூரில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புதிய தரைபாலம்; 40 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாதனூர் – குடியாத்தம் இடையே போடப்பட்ட தரைப்பாலம் இன்று அடித்துச்செல்லப்பட்டது. இதனால், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தமிழக – ஆந்திர வனப்பகுதிகளிலும், பாலாற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோடை காலத்திலும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் … Read more

“துக்ளக் ஆட்சி நடத்தும் பாஜகவால் எங்கள் கட்சியைத் தடுக்க முடியாது” – மம்தா பானர்ஜி காட்டம்

கொல்கத்தா: “சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக மத்தியில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “அரசு புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு மத்தியில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. … Read more

பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி தீர்ப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், இதைத்தான் நீங்கள் … Read more

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து பெரியார், நாராயண குரு பகுதிகள் நீக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் இருந்து பெரியார், நாராயண குரு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மொழிப் பாடப் புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் கேசவ் பலிராம் ஹெக்டேவின் உரையை சேர்ப்பது தொடர்பாக எதிர்ப்புகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சர்ச்சை நீங்குவதற்குள், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் பெரியார், நாராயண குரு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மாநில பாடநூல் … Read more

‘இயல்’ வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஆ.இரா.வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: கனடா இலக்கியத் தோட்ட விருது பெறும் எழுத்தாளர் வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’- வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான … Read more

‘‘மோசமான சாதி அரசியல் செய்யும் காங்கிரஸ்; 3 ஆண்டுகளை வீணாக்கி விட்டேன்’’- ஹர்த்திக் படேல் விரக்தி

அகமதாபாத்: குஜராத் காங்கிரஸ் கட்சியில் மிக மோசமான சாதி அரசியல் உள்ளது, மூன்றாண்டுகளை அந்த கட்சியில் வீணாக்கி விட்டேன் என அக்கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்கக் கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு `சர்தார் பட்டேல் குழு’ என்ற அமைப்பை தொடங்கி போராடியவர் ஹர்திக் படேல். அந்த அமைப்பின் மூலம் குறுகியகாலத்தில் பட்டேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஓபிசி … Read more

கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தால் புகார் அளிக்கலாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களை கடந்து நிலுவையில் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டிட திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமால் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க தொடர்புடைய வார்டு உதவி பொறியாளர் அல்லது இளைநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் … Read more