"மொழிகளால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" – சுதீப்புக்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்

பெங்களுரூ: “மொழிகளால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதீப்பின் கூற்று சரியானது” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சுதீப், “இந்தி தேசிய மொழி கிடையாது” என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதில்தர இருவருக்கு ட்விட்டரில் வார்த்தை மோதலே ஏற்பட்டது. இறுதியில் நட்புக்கரம் காட்டி உரையாடலை முடிந்துக் கொண்டனர். இந்த நிலையில், நடிகர் சுதீப்பின் கருத்துக்கு கன்னட மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் ஆதரவு … Read more

2-வது அலையின்போது மட்டும் 17,000… கரோனா காலத்தில் சென்னையில் வழக்கத்தைவிட 25,900 மரணங்கள் கூடுதலாக பதிவு

சென்னை: கரோனா காலத்தில் சென்னையில் 25,900 மரணங்கள் கூடுதலாக பதிவாகி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதில் 2-வது அலையின்போது மட்டும் கூடுதலாக 17,700 மரணங்கள் பதிவாகி இருக்கலாம் என்று ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 3-வது இடம்: கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக எண்ணிகையில் கரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை 5.22 லட்சம் கரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், உண்மையாக கரோனா மரணங்களின் … Read more

உ.பி: மத வழிபாட்டுத் தலங்களில் கடந்த 72 மணி நேரத்தில் 6 ஆயிரம் ஒலிபெருக்கிகள் நீக்கம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து 72 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், மத வழிபாட்டுத் தலங்களில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை அகற்றவும் அனுமதி பெற்ற ஒலிபெருக்கிகளில் ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்கு கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதையடுத்து ஒலிபெருக்கிகளுக்கான சட்ட … Read more

சட்ட விதிகளுக்கு புறம்பான 'Foldable Number plate' – சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை

சென்னை: மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட்டுகளை தயார் செய்து கொடுக்கும் நபர்கள், விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்படி, காவல் கூடுதல் ஆணையாளர், பெருநகர சென்னை காவல் போக்குவரத்து மற்றும் கணம் காவல் இணை … Read more

காவல் நிலையம் மீது தாக்குதல்: கர்நாடகாவில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 கவுன்சிலர் உட்பட 148 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கடந்த 17-ம் தேதி முஸ்லிம்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்கள் பரவின. இதனை பரப்பியதாக அபிஷேக் ஹிரேமத் (27) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் பழைய ஹூப்ளி காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவலர்களின் வாகனங்கள், அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 12 போலீஸார் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய தடியடியில் 30க்கும் மேற்பட்டோர் … Read more

சென்னையில் போக்குவரத்து காவல்துறை சிறப்பு வாகன தணிக்கை: ஒரே நாளில் 1,595 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் நேற்று (ஏப்.27) போக்குவரத்து காவல்துறை நடத்திய சிறப்பு வாகனத் தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1595 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில், “சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவது, அதிக வேகமாக வாகனம் ஓட்டி … Read more

'குடியரசுத் தலைவராவது எனது நோக்கமல்ல; நாட்டின் பிரதமராவதே எனது கனவு' – மாயாவதி

புதுடெல்லி: “குடியரசு தலைவராவது எனது நோக்கமல்ல; உ.பி. முதல்வராகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதியை பாஜக குடியரசு தலைவராக்குமா? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “குடியரசு தலைவராவது எனது நோக்கமல்ல; உ.பி. முதல்வராகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் … Read more

கராச்சி பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்ட பெண் பயங்கரவாதி: கணவர் 'பெருமித' ட்வீட்!

கராச்சி பல்கலைகழகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஷாரி பலுச் என்ர அந்தப் பெண் படித்து பட்டம் வாங்கியவரும் கூட. பாகிஸ்தானின் கராச்சி பல்கலைகழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி, சீன மொழியை பயிற்றுவிக்கும் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர். பலியானவர்களில் மூன்று பேர் சீனாவை சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய … Read more

பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.3,270 கோடி கூடுதல் வருவாய்: தமிழக அரசு தகவல்

சென்னை: 2021-2022 நிதியாண்டில் பதிவுத்துறையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.13,913.65 கோடி. இது பதிவுத்துறையில் இதுவரை ஈட்டப்படாத மிக அதிக அளவிலான வருவாயாகும். மேலும், இத்தொகையானது முந்தைய 2020-2021 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருவாயை விட ரூ.3,270.57 கோடி அதிகமாகும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் … Read more

பதவிக்காலம் முடிவதால் 3 மாத இடைவெளியில் 3 தலைமை நீதிபதிகளை சந்திக்கும் உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மூன்று மாத இடைவெளியில் உச்சநீதிமன்றம் மூன்று தலைமை நீதிபதிகளை சந்திக்கவிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ளார். அவரையடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யு.யு.லலித் நவம்பர் 8-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். அவருக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பொறுப்பில் இருப்பார். மூன்று மாத இடைவெளியில் மூன்று தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றம் … Read more