உ.பி.யில் ஒலிபெருக்கி ஓசையை கட்டுப்படுத்திய மசூதி, கோயில்கள்

புதுடெல்லி: முஸ்லிம்களின் ஐந்து வேளை தொழுகைக்கான மசூதிகளின் ‘அஸான்’ எனும் பாங்கு முழக்கம், ஒலிபெருக்கிகளில் ஒலிப்பது சர்ச்சையானது. இந்துத்துவா அரசியலை கொள்கையாகக் கொண்ட கட்சியினரால், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இது பிரச்சினையாக்கப்பட்டது. இதையடுத்து பாஜக ஆளும் உ.பி.யிலும் இப்பிரச்சினை கிளம்பியது. இதனால் உருவான பதற்றத்தை தொடக்கத்திலேயே தணிக்கும் பொருட்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக உ.பி. உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவினேஷ் குமார் அவஸ்தி பிறப்பித்த … Read more

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்: கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு, மே 5 முதல் 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மே 10 முதல்31-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன. 3,936 தேர்வு மையங்கள் இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்வுப் பணிகள் முடுக்கி … Read more

நம்பிக்கை இழந்த 45 கோடி பேர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு குடும்பத்திலும் வேலையின்மை என்பதே புதிய இந்தியாவின் புதிய முழக்கமாக உள்ளது. பிரதமர் மோடியின் அதிரடி முடிவுகளால் நாட்டில் 45 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். 75 ஆண்டுகளில், இவ்வளவு பேரின் நம்பிக்கை இழப்புக்கு காரணமான, நாட்டின் முதல் பிரதமர் மோடி ஆவார்” என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவுடன் செய்தி அறிக்கை ஒன்றையும் … Read more

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: திருச்சியில் மே 1-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி, திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடை பெற உள்ளது. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவு என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, … Read more

தஞ்சாவூர் களிமேடு அருகே சோகம்: மின்கம்பியில் தேர் உரசியதால் 10 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த களிமேடு பகுதியில் நடந்த திருவிழாவின் போது மின்சாரணம் தாக்கி 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை அடுத்த களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது தேர் இழுக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது தேர் திருவிழா. தஞ்சை பூதலூர் சாலையை அடுத்து களிமேடு பகுதியில் தேர் … Read more

புதிய பணியிடங்கள் உருவாக்க தடை: மின்வாரியம் உத்தரவு

சென்னை: புதிய பணியிடங்களை உருவாக்க தடைவிதித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மின்வாரியம், செலவைக் குறைக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மின்வாரிய அலுவலகங்களில் தொலைபேசி, இணையதளம் போன்றவற்றுக்கான செலவினங்களைக் குறைக்க வேண்டும். புதிதாக வாகனம், மரச் சாமான்கள் வாங்கக் கூடாது. ஊழியர் நலத்திட்டங்களுக்கு முன்பணம் வழங்குவதை நிறுத்திக் கொள்ளலாம். விருந்து போன்ற கேளிக்கைகளுக்கு நிதி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். பழுதடையும் இயந்திரங்களை முடிந்த அளவுக்கு பழுது பார்த்து அவற்றையே பயன்படுத்த வேண்டும். … Read more

தமிழக ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: கே எஸ் அழகிரி அறிவிப்பு

சென்னை: அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தமிழகத்துக்கு விரோதமாக செயல்பட்டார். அவரைப் பின்பற்றி தற்போதைய ஆளுநர் ஆர்என் ரவியும் தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். இதனால், தமிழக மக்களிடையே ஆளுநர்கள் மீது கொந்தளிப்பான … Read more

குடிநோய் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு ரூ.2.61 கோடி: தமிழக அரசு தகவல்

சென்னை: 2021-2022 ஆம் ஆண்டில் 872 குடிநோய் குற்றவாளிகளின் மறுவாழ்விற்காக ரூ.2.61 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு … Read more

மதுரை – நத்தம் பறக்கும் பாலம் விபத்து: ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்

மதுரை: மதுரை – நத்தம் பறக்கும் பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பான விசாரணை நிறைவுடைந்த நிலையில், பாலம் கட்ட ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.3 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரை புதுநத்தம் சாலையில் 7.3 கி.மீ., ரூ.545 கோடியில் பறக்கும் பாலம் கட்டுமானப்பணி கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், நாராயணபுரம் பகுதியில் … Read more

கருணாநிதி பிறந்த நாளை 'மாநில சுயாட்சி நாள்' ஆக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: “மாநில உரிமைகளுக்காகப் போராடிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ‘மாநில சுயாட்சி நாள்’ அல்லது ‘மாநில உரிமைகள் நாள்’ என அறிவிக்க வேண்டும்“ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுமென இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரவேற்கிறோம். தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காக தனது … Read more