நெல்லை அருகே கத்திக்குத்தில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு அமைச்சர், டிஜிபி ஆறுதல்: முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிதியை வழங்கினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கத்திக்குத்தில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதியை வழங்கினர். திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் தெரசா. இவர், பழவூர் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் அதிகாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் வாக்குவாதம் செய்து கத்தியால் குத்தியதில் … Read more

புதிய தொழிலாளர் சட்டம் ஜூலை 1-ல் அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வார விடுமுறை கிடைக்க வாய்ப்பு

புதுடெல்லி: புதிய தொழிலாளர் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டால், நிறுவனங் கள் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரித்து, அதை ஈடுகட்டும் வகையில், கூடுதல் வார விடு முறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான விதிகளை வகுக்கவில்லை. இந்த புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு … Read more

அம்பேத்கர், பிரதமர் மோடி குறித்து திருமாவளவனுடன் விவாதிக்க தயார்: ட்விட்டரில் அண்ணாமலை மீண்டும் அழைப்பு

சென்னை: சென்னையில் பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாகவிசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக வுக்கு அருகதை இல்லை” என்று கூறியிருந்தார். அதற்கு, “அம்பேத்கர், பிரதமர் மோடி குறித்து திருமாவள வனுடன் விவாதம் நடத்த தயாராகஉள்ளேன்” என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறி னார். இதற்கு பதிலளித்த தொல்.திருமாவளவன், “அண்ணாமலையுடன் விவாதிக்க, அவரைப் போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சப்-ஜூனியரை வேண்டும் என்றால் … Read more

ஜம்முவின் சஞ்சுவான் பகுதியில் நடந்த தாக்குதல் வழக்கில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது

ஜம்மு: ஜம்முவின் சஞ்சுவான் பகுதியில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி பிரதமரின் வருகையால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், வரலாறு காணாத பாதுகாப்பையும் மீறி ஜம்முவில் நேற்று குண்டுவெடிப்பு நடந்தது. பிரதமர் மோடி அங்கு செல்லும் முன்பு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் நிச்சயம் நிறைவேறும்: பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச் சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் ஆகிய இரு புதிய அரசுஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் தொடக்க விழா, சென்னை அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. புதிய அமைப்புகளை தொடங்கி வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அரசு ஊழியர்களின் முக்கியகோரிக்கையான பழைய ஓய்வூதியதிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்களின் கோரிக்கைகளுக்காக நான் போராடுவேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார். பாமக இளைஞர் … Read more

டெல்லி ஜஹாங்கிர்புரியில் இந்து, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றிய மூவர்ணக் கொடி ஊர்வலம்

கடந்த சில நாட்களாகவே டெல்லி ஜஹாங்கிர்புரி இந்து, முஸ்லிம் மோதலின் அடையாளமாக பேசப்பட்ட நிலையில் அப்பகுதி வாழ் இந்து, முஸ்லிம் மக்கள் இணைந்து நேற்று மேற்கொண்ட மூவர்ணக் கொடி ஊர்வலம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது. டெல்லி ஜஹாங்கிர்புரி சி மற்றும் டி ப்ளாக் பகுதிவாசிகள் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலம் சென்ற வழியில் இருந்த குடியிருப்புகளில் வசித்தோர் ஊர்வலத்தை மலர் தூவி வரவேற்றனர். மாலை 6 மணியளவில் தொடங்கிய ஊர்வலம் அமைதியையும், மத … Read more

காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடக்கம்: மின்சாரத் தட்டுப்பாடு நீங்கும் என மின்வாரியம் நம்பிக்கை

சென்னை: காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தினசரி மின்தேவை சுமார் 14,000 மெகாவாட் மின்சாரமாகும். எனினும்,கோடைகாலத்தில் 16,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி தினசரி மின்தேவை 17,196 மெகாவாட் அளவை எட்டி சாதனை படைத்தது. தினசரி மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தனதுசொந்த உற்பத்தி நிலையங்களில் தினமும் 3,700 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. எஞ்சிய … Read more

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு: தீவிர வலதுசாரியை வீழ்த்தினார்

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவது வழக்கம். இதில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியிட்டனர். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50%க்கும் மேல் வாக்குகளைப் பெறாத நிலையில் முதல் இரு இடங்களைப் பெறுவோர் இடையே இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று (ஏப். 24-ம் தேதி) நடந்தது. இத்தேர்தலுக்காக புதுச்சேரி, தமிழகம், கேரளத்தில் 4,564 பேர் … Read more

உதகையில் இன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங் களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஏப். 25) தொடங்குகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார். தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள்மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,நாளையும் (திங்கள், செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி ஆகிய … Read more

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 60 மாணவர்களில் 40 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று பாதிப்பு குறித்து,சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு … Read more