தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
சென்னை: பாடத்திட்டத்தில் 3-வது மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக இருமொழிக் கொள்கை அமலில் இருக்கிறது. இதை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக தொடங்கியுள்ளதாக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தாய்மொழியாகிய தமிழ், உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் … Read more