வன்முறையை தூண்டும் தகவலை பரப்ப வேண்டாம்: சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ஆதாரமற்ற, வன்முறையை தூண்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்மையில் நடந்த சில நிகழ்ச்சிகள் தொடர்பான ஆதாரமற்ற, தவறான, வன்முறையை தூண்டக்கூடிய தகவல்களை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் பரப்பியது தெரியவந்துள்ளது. இது மத ரீதியிலான மோதலுக்கு வழி வகுத்தது. இது சட்ட விதிகளை மீறும் செயலாகும். குறிப்பாக, டெல்லியில், கடந்த வாரம் ராம நவமி … Read more

இலங்கைக்கு மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

கொழும்பு: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு உடனடியாக 400 கோடி டாலர் தேவைப்படுகிறது. இதையடுத்து, நிதியமைச்சர் அலி சாப்ரி உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடி உள்ளார். இப்போது அமெரிக்கா சென்றுள்ள சாப்ரி, … Read more

பஞ்சாயத்து ராஜ் தினம்: மநீம நிர்வாகிகளுடன் இணையவழியில் கமல் இன்று உரை

சென்னை: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆன்லைனில் உரையாற்றுகிறார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று (ஏப்.24) தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதிகாரங்களை பரவலாக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் குறித்தும், கிராம சபைகள் குறித்தும் பரவலான விழிப்புணர்வை கொண்டுவந்து, கிராம சபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்தியதில், … Read more

முஸ்லிம் அரசுகளின் எழுச்சி பற்றிய பாடங்களை நீக்கியது சிபிஎஸ்இ

புதுடெல்லி: சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சிபிஎஸ்இ 11, 12-ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத் திட்டத்திலிருந்து பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகியப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதைப் போலவே 10-ம் வகுப்பு பாடத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு என்ற பிரிவில் வேளாண் துறையில் உலக மயமாக்கலின் தாக்கம் என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபயஸ் அகமது பயஸ் என்ற உருதுக் கவிஞரின் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உட்பட 220 சாட்சிகளிடம் விசாரணை: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா உள்ளிட்ட 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை குறித்த விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் … Read more

ஜம்மு-காஷ்மீரில் இன்று பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் பங்கேற்பு: ரூ.20,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டம், பாலி கிராமத்தில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் 30,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதனிடையே பிரதமரின் விழா நடைபெறும் இடத்துக்கு அருகே நேற்று முன்தினம் … Read more

இணை போக்குவரத்து ஆணையரின் காரில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் – கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் மண்டல இணை போக்குவரத்து ஆணையரின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையராக, சவுரிபாளையத்தைச் சேர்ந்த கே.உமாசக்தி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் உதவியாளர் ஒருவர் மூலம் அலுவலகத்துக்கு வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் இவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இணை … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த திட்டம்

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை பாஜக கொள்கையாக கொண்டுள்ளது. தொடக்கம் முதல் அனைத்து தேர்தல் அறிக்கையிலும் இந்த விஷயங்கள் தவறாமல் இடம் பெற்றன. இவற்றில் முதல் மூன்றும் அமலாக்கப்பட்டுவிட, மீதம் இருப்பது, பொது சிவில் சட்டம் மட்டுமே. இதுவும், விரைவில் அமலாக்க முயற்சிக்கப்படுகிறது. பாஜகவின் 2019 தேர்தல் அறிக்கையிலும் பொது சிவில் சட்ட அமலாக்கம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச்சில் முடிந்த … Read more

சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை:சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் உறுப்பினர்களின் கோரிக்கைகள், கேள்விகளுக்கு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்பதில் அளித்தார். அவர் கூறியதாவது: கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவிகள்இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3-5 வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1,000-ம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து … Read more

உலகிலேயே முதல் நாடாக இந்தியாவை மாற்ற இலக்கு: பிரதமரின் லட்சியம் குறித்து அமித் ஷா பேச்சு

ஜெகதீஷ்பூர்: நாடு தனது 100வது சுதந்திரத்தை கொண்டாடும்போது, உலகிலேயே முதல் நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெகதீஷ்பூரில் சுதந்திர போராட்ட வீரர் வீர் கன்வர் சிங் கடந்த 1857-ம் ஆண்டு ஏற்படுத்திய கலகத்தின் நினைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். பா.ஜ.க தொண்டர்கள் 77,000 பேர் கலந்துகொண்டு மூவர்ண … Read more