கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனிப்படை விசாரணை ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் சசிகலா உட்பட இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் அரசுத் … Read more

கரோனா அப்டேட் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு தொற்று உறுதி

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேர் புதிதாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 15,079 பேர் கரோனா தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,55,179 பேரிடம் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் 2,527 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரையில் மொத்தம் 83.42 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. … Read more

வெல்டர், ஃபிட்டர் பணிக்கு தமிழில் மறுதேர்வு நடத்துக: இஸ்ரோ இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை: மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இஸ்ரோ இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்து வளாகம், இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை வெளியிட்டு எழுத்துத் தேர்வுகளை கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும், நாகர்கோவிலிலும் நடத்தியுள்ளது. அது “சி” பிரிவு, “பி” பிரிவு … Read more

விஜயவாடாவில் இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறி ஒருவர் பலி: மனைவி, குழந்தைகள் கவலைக்கிடம்

விஜயவாடா: ஆந்திராவில் மின்சார ஸ்கூட்டர் எனப்படும் இ-ஸ்கூட்டரை ஒருவர் நேற்று வாங்கிய நிலையில் இன்று பேட்டரி சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சர்வதேச அளவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து இருந்தபோதிலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக … Read more

நெல்லை பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: உயர்தர சிகிச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு 

சென்னை: மர்ம நபர் கத்தியால் குத்தியதால் படுகாயம் அடைந்த நெல்லை பெண் உதவி ஆய்வாளருக்கு உயர்தர சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி என்பவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை … Read more

பாகிஸ்தானில் பட்டம் பெற்றால் இந்தியாவில் செல்லாது; வேலையும் கிடையாது: யுஜிசி, ஏஐசிடிஇ அதிரடி

புதுடெல்லி: இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேல்படிப்பு மேற்கொள்ள வேண்டாம். அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியன தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் உயர்கல்வி பயில யாரும் செல்ல வேண்டாம். இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் … Read more

‘‘ரஷ்யாவை நம்பியிருக்க வேண்டாம்; நாங்கள் இருக்கிறோம்’’ -இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் நட்பு அழைப்பு

வாஷிங்டன்: இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவை சார்ந்து இருப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை, இருந்தாலும் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவும், உடன்பாடு செய்யவும் விரும்புகிறோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. இதனால் உலக … Read more

காரைக்கால் | தக்களூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் தக்களூரில் உள்ள புகழ் பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தக்களூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பான வகையில் ஆண்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான திருவிழா நேற்று இரவு (ஏப்.22) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் சிலுவைக் கொடி … Read more

'கோட்சேவை கொண்டாடினாலும் தலைவர்களை சபர்மதிக்கு தானே அழைத்துச் சென்றீர்கள்' – பாஜக மீது சிவ சேனா விமர்சனம்

“கோட்சேவை கொண்டாடினாலும் கூட இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சபர்மதி ஆசிரமத்திற்கு தானே அழைத்துச் சென்றீர்கள். இந்தியாவின் அடையாளம் இன்றும் காந்தி தான்” என்று பாஜகவை விமர்சித்துள்ளது சிவ சேனா. இது குறித்து சிவ சேனா கட்சி தனது அதிகாரபூர்வ இதழான சாம்னாவில் விமர்சித்துள்ளது. சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜகவின் சித்தாந்தம் நாதுராம் கோட்சேவை ஆதரிக்கிறது. ஆனால் வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் உடனே அவர்களை மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு தான் அழைத்துச் செல்கிறது. … Read more

ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டம் நடத்தப்படும்; 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரசின் பல்வேறு திட்டங்களை கிராமஅளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முதல்கட்டமாக இந்த ஆண்டு600 ஊராட்சிகளில் ‘கிராம செயலகங்கள்’ கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும், நவ.1-ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பேரவை விதி 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தை உள்ளாட்சிகள் தினம் என கொண்டாட … Read more