2013 மரக்காணம் கலவர வழக்கில் பாமகவினர் 20 பேரும் விடுதலை: திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம்: மரக்காணத்தில் 2013-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் இன்று விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதியன்று வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர் சமூகத்தினர், பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மகாபலிபுரத்திற்கு பல்வேறு வாகனங்களில் சென்றனர். அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை … Read more

இணைய வழி சிறப்பு கலந்துரையாடல்; ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ – நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு வரும் 23-ம் தேதி சனிக்கிழமை (நாளை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தவர். கலாமின் மறைவுக்கு பிறகு, அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு … Read more

மின்வெட்டு பிரச்சினை | நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்க: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை உருவெடுத்துள்ள நிலையில், நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர … Read more

21,200 வீரர்கள், 176 விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் – ரஷ்யாவுக்கு ஷாக் கொடுத்த உக்ரைன்

கீவ்: உக்ரைன் நாட்டின் 10-வது மிகப் பெரிய நகரமான மரியுபோலை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்ய இழந்துள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பெரிதாக வெளியில் தெரிவதில்லை. ரஷ்ய தரப்பு தங்களின் இழப்புகள் பற்றி பேசவில்லை. சில தினங்கள் முன் ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலை உக்ரைன் வீழ்த்தியது மட்டுமே பெரிய சம்பவமாக இருந்தது. இதனிடையே, போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவு பற்றிய புள்ளிவிவரங்களை உக்ரைனின் வெளியுறவு … Read more

இ-நூலகம் முதல் கல்விச் சுற்றுலா வரை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் 10 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: 275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் இணைய வழி நூலகம் (E-Library) அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சொந்த கட்டடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், … Read more

புதுச்சேரியில் உரிய பணியிடங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுக: நாஜிம் எம்.எல்.ஏ

காரைக்கால்: புதுச்சேரியில் உரிய பணியிடங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று புதுவை முதல்வருக்கு எம்.எல்.ஏ நாஜிம் வலியுறுத்தியுள்ளார். காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரி அரசு வன்னியர்கள், மீனவர்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டு முறையை ஏற்கெனவே அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பணியிடங்களில் குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் மட்டுமே மாநில அரசு அறிவித்த இட … Read more

புதுச்சேரியில் முழு பாஜக ஆட்சியாக மாற்றும் முயற்சியாகவே இருக்கலாம்: அமித் ஷா வருகை குறித்து காங். சந்தேகம்

புதுச்சேரி: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுவை வருகை, பாஜகவின் ஆட்சியாக மாற்ற ஒரு முயற்சியாக இருக்கலாம்“ என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரிக்கு நாளை மறுநாள் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, புதுச்சேரி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் நடத்துகின்ற கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும். மத்திய உள்துறை அமைச்சர் … Read more

ஒரே நாளில் மூவர் பலி: கழிவுநீர்த் தொட்டிக்குள் மூச்சை விடும் மனிதர்கள் – இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம்

சென்னை: கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது அதிகம் பேர் மரணம் அடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 43 பேர் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் விதிகளின்படி தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கும் … Read more

ஜஹங்கீர்புரியில் எதிர்க்கட்சிகள் முகாம்: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி மறுக்கும் டெல்லி போலீஸ்

புதுடெல்லி: ஜஹங்கீர்புரியில் புல்டோசர் இடிப்பால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கு அனுமதி மறுக்கும் டெல்லி போலீஸாரால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி டெல்லி ஜஹங்கீர்புரியில் நடைபெற்ற அனுமர் ஜெயந்தி ஊர்வலம் கலவரமானது. இதில் இருதரப்பிலும் 24 பேர்களை கைது செய்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், கலவரத்தை காரணமாக்கி ஜஹங்கீர்புரியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், புல்டோசர் மூலம் அப்புறப்படுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் தடை விதித்த பின்பும் சுமார் 3 … Read more

புதுச்சேரி | ராஜ்நிவாஸில் அமித் ஷாவை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ராஜ்நிவாஸில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புதுச்சேரி வளர்ச்சிக்கான முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ரங்கசாமி முன்வைக்கிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக வரும் 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். ஏற்கெனவே தேர்தலில் வென்று பதவியேற்ற பிறகும் பிரதமர் மோடியை இன்னும் முதல்வர் ரங்கசாமி சந்திக்காமல் இருந்தார். அண்மையில்தான் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கக் … Read more