தவறை ஒப்புக்கொண்டதால் கருணை காட்ட முடியாது – அரசு ஊழியர் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தபால் துறை ஊழியர் ஒருவர் ரூ.16.59 லட்சம் அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அவரை பணிநீக்கம் செய்து அஞ்சல் துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அந்த ஊழியர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அஞ்சல் துறை முறையீடு செய்த போது, சம்பந்தப்பட்ட தபால்துறை … Read more

'முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிளிங் செல்ல ராகுல் காந்திக்கு விருப்பம்' – எம்எல்ஏ செல்வபெருந்தகை பேச்சு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சைக்கிளிங் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்ததாக அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார். தமிழக சட்டப்பேரைவில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டை 4 மண்டலங்களாக பிரித்து, 4 மண்டலங்களிலும் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும், வட சென்னையில் குத்துத்சண்டை மையம் அமைக்க நடவடிக்கை … Read more

2023 தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி கிடையாது – முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்

பெங்க‌ளூரு: கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான‌ காங்கிரஸ், மஜத ஆகியவை வியூகம் வகுக்கும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று கூறியதாவது: கர்நாடகாவில் மத அரசியலை தொடங்கி வைத்ததே காங்கிரஸ் தான். அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதையில் தான் பாஜக இப்போது மதவாத ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. எனது தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையாவே … Read more

ஆப்கனில் திரும்பும் தலிபான் ஸ்டைல் தண்டனைகள்: மது அருந்தியதற்காக கசையடி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியமைந்தது. தலிபான் ஆட்சியை இன்னும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. காரணம் தலிபான்கள் பெண் கல்விக்கு தடை, பெண்கள் பணியில் இருக்கத் தடை என பழைய நடைமுறையில் இருந்து தன்னை சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில், மது அருந்தியதாகவும், மது விற்றதாகவும் கைதான 7 பேருக்கு தலிபான்கள் கசையடி தண்டனை கொடுத்துள்ளனர். முன்னதாக தலிபான்கள் 1996 முதல் … Read more

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசுக் கட்டணமே வசூலிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: மாணவர்களின் நலன் கருதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் ஆண்டு கட்டணமாக ரூ.13,610 மட்டும் தான் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆளுகையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தங்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்துக்கு இணையாக குறைக்க வேண்டும் … Read more

உத்தராகண்டில் குடியேறியவர்கள் விவரத்தை ஆய்வு செய்ய வேண்டும் – அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து குடியேறி அமைதியை சீர்குலைப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஏற்கெனவே முதல்வர் புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில், “உத்தராகண்ட் மாநிலத்துக்கு தனி கலாச்சாரம் உள்ளது. அதை பாதுகாக்க வேண்டும். அதற்காக, உத்தராகண்டில் வந்து குடியேறிய பிற மாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்க்கும் பணியை தொடங்க உள்ளோம். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் பற்றி தெரியவந்தால் அவர்கள் பின்னணி குறித்து ஆராயப்படும். அவர்களைப் போன்றவர்கள் உத்தராகண்ட்டில் தங்கி அமைதிக்கு இடையூறு … Read more

ரயிலை ஒரு நிமிடம் தாமதமாக இயக்கியதற்காக சம்பளத்தை பிடித்தது செல்லாது: ஜப்பான் ஓட்டுநர் வழக்கில் தீர்ப்பு

டோக்கியோ: ரயிலை 1 நிமிடம் தாமதமாக இயக்கியதற்காக சம்பளக் குறைப்பை சந்தித்த ஜப்பான் ரயில் ஓட்டுநர் தொடர்ந்த வழக்கில் அவரது மறைவுக்குப் பின்னர் நீதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜப்பான் ரயில்வே துறையின் மேற்கு பிராந்திய ஒகாயமா ரயில் நிலையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் ரயிலை குறித்த நேரத்தைவிட ஒரு நிமிடம் தாமதாக இயக்கியதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து, அந்த ஓட்டுநரின் சம்பளத்திலிருந்து 56 யென் பிடித்தம் செய்யப்பட்டது. (இன்றைய இந்திய … Read more

திருவான்மியூர், சோழிங்கநல்லூரில் ரூ.105 கோடியில் அடுக்குமாடி வீடுகள்: அமைச்சர் எஸ்.முத்துசாமி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி பேசியதாவது: வீட்டுவசதி வாரியக் கட்டிடங்களின் தரத்தைப்பேண தனியார் கூட்டு முயற்சி திட்டத்தைசெயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 6 மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 6,323 பயனாளிகளுக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சேட்டிலைட் சிட்டி எனப்படும் துணை நகரங்கள் அமைப்பது குறித்து ஆய்வுசெய்ய தலைமைச் செயலர் … Read more

டெல்லி ஜஹாங்கிர்புரியில் வன்முறை நடந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் உள்ள ஜஹாங்கிபுரி பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த வன்முறையில் போலீஸார் உட்பட பலர் காய மடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய … Read more

தெருவுக்கு போரிஸ் ஜான்சனின் பெயர்: ரஷ்ய அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் உக்ரைன்

கீவ்: உக்ரைனின் துறைமுக நகரான ஒடேசாவில் உள்ள ஒரு தெருவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெயரை சூட்ட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிக், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்ப்பதில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கியப் பங்காற்றுகிறார். ரஷ்யாவுக்கு எதிராக நிறைய தடைகளை விதித்துள்ளார். அதனால் மேயாகோவ்ஸ்கி தெருவை போரிஸ் ஜான்சன் தெரு என்று பெயர் மாற்றியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேயாகோவ்ஸ்கி என்ற தெருப் பெயர் விளாடிமிர் மேயாகோவ்ஸ்கி … Read more