ஆளுநரின் பணிகளை தடுக்கும் நோக்கத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை – டிஜிபிக்கு பாதுகாப்பு அதிகாரி கடிதம்

சென்னை: ஆளுநரின் பணிகளை தடுக்கும் நோக்கத்தில், போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதினத்துக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். அப்போது, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மகேஷ், மீத்தேன் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உட்பட 73 பேர், மயிலாடுதுறை சாலை, மன்னம்பந்தல் ஏவிசி … Read more

பயன்பாடற்ற கடற்படை கப்பலை துல்லியமாக தாக்கிய பிரம்மோஸ் – சோதனை வெற்றி என கடற்படை தகவல்

புதுடெல்லி: பயன்பாடற்ற கடற்படை கப்பலை பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கியதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்ய கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடியவை ஆகும். பிரம்மோஸ் ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் வலிமை படைத்தவை. இந்நிலையில் டெல்லியில் ஐ.என்.எஸ். டெல்லி ஏவுகணை அழிப்பு … Read more

இலங்கைக்கு நிதியுதவி வழங்க வேண்டும் – ஐஎம்எப்-பிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

புதுடெல்லி: இலங்கைக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எப்) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். நமது அண்டை நாடான இலங்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.வெளிநாடுகள் மற்றும் சர்வதேச வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதையும் வட்டி செலுத்துவதையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் ஐஎம்எப்பிடம் இருந்து இந்த ஆண்டுக்கு 400 கோடி டாலர் நிதியுதவி கோரியுள்ளது. இந்நிலையில் ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர … Read more

அம்மா முழு உடல் பரிசோதனை மையம் – ‘அதிநவீன முழு உடல் பரிசோதனை மையமாக’ மாற்றம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ 2016-ல் தொடங்கப்பட்டது. ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் முழு உடலை பரிசோதனை செய்துகொள்ளும் இந்த மையத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ கடந்த 2018-ல் அப்போதைய முதல்வர் கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. … Read more

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று – தமிழகத்தில் முகக் கவசம் கட்டாயம், டெல்லியில் அபராதம் விதிக்க முடிவு

புதுடெல்லி / சென்னை: கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று பெருமளவு குறைந்து வந்ததால், கடந்த ஏப்.1 முதல் நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. உத்தரபிரதேசம், ஹரியாணா, டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த … Read more

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்

அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி குலாப் சிங் ஷாஹீன் மாயமானார். அவரை அந்நாட்டு உளவு அமைப்புகள் கடத்தியதாகவும் ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்தியாவில் செயல்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறும்போது, “பாகிஸ்தானில் பணிபுரிந்த குலாப் சிங் ஷாஹீன் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஷாஹீன் எங்கு உள்ளார் என்பது … Read more

ஓர் ஆண்டில் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த, காயம் அடைந்தோர் எண்ணிக்கை 200+

சென்னை: 2021 – 2022 ஓராண்டு காலக்கட்டத்தில் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேலாக பதிவாகியுள்ளது என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட தரவு தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, படிகளில் பயணிப்பதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் ரயிலிகளில் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், படியில் … Read more

கரைகிறதா மதுரை மாநகர அதிமுக? – செல்லூர் ராஜூ மீதான அதிருப்தியால் மாற்றுக் கட்சிகளுக்கு தாவும் நிர்வாகிகள்

மதுரை: மதுரை மாநகரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் செயல்பாடு பிடிக்காமல் மாநகர நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக மாற்று கட்சிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அதிமுகவில் கடந்த 10 ஆண்டு அமைச்சரவையில் துறை மாற்றப்படாமல் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் கே.ராஜூ. ஜெயலலிதா இருந்தவரை அமைச்சராக, மாநகர செயலாளராக அதிமுகவில் செல்வாக்குடன் இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு மதுரை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா கட்சித் … Read more

'எஃப்ஐஆர் இல்லை; மொபைல் போன் முடக்கம்?' – நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜிக்னேஷ் மேவானி

பாலன்பூர்: குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும் அறியப்படும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் அஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் மூன்று இளம் தலைவர்களில் முக்கியமானவர். குஜராத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் முகமாக அறியப்படுபவர். ஊனா தாலுகாவில் மாட்டுத் தோலை உரித்த தலித் குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இவர் நடத்திய பேரணியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். குஜராத்தில் பட்டியலினக் குடும்பத்தில் பிறந்தவரான ஜிக்னேஷ் மேவானி … Read more

திருமழிசையில் ரூ.1,280 கோடியில் குடியிருப்புகள், வணிக வளாகம்: வீட்டு வசதி and நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 33 அறிவிப்புகள்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் (SAP) இளநிலை திட்டமிடல் (B.Plan) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ரூ.10 கோடி நிதி வழங்கும், சிஎம்டிஏ எல்லைக்குள் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் வலைபின்னல் சாலை அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று … Read more