ஆளுநருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு ஏன்? – அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: தமிழக ஆளுநரை இன்று காலை அமைச்சர்கள் திடீரென சந்தித்த நிலையில், நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து பேசுவதற்காக தமிழக அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போத அவர் கூறியது: ” முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரின்ஸ் கஜேந்திரபாபு இன்று கல்வியாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து … Read more

அம்பேத்கர் பிறந்தநாள் விழா: சென்னையில் பாஜக, விசிகவினர் இடையே திடீர் மோதல் – ஒருவருக்கு பலத்த காயம்

சென்னை: சென்னையில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள்விழாவில் பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக பாஜக … Read more

நீட் விலக்கு மசோதா | தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் வகையில் விரைவில் அனுப்பவேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பிய கடிதம்: “தமிழக ஆளுநராக நீங்கள் பொறுப்பேற்ற சில மாதங்களாக நாம் நல்லுறவைப் பேணி வருகிறோம். இந்தக் காலகட்டத்தில், தமிழக மக்களின் விருப்பத்திற்கு எனது அரசு அதிக மதிப்பளிப்பதையும் கவனித்திருப்பீர்கள். அதன்படி, மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, பிளஸ் 2 … Read more

மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள்; அரசுக்கும், விவசாயிகளுக்கும் இழப்பு: எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு மற்றும் நெல் சாகுபடி பரப்பை முறையாக கணக்கெடுக்காததால் விவசாயிகளுக்கு இழப்பு என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 11 மாத கால விடியா ஆட்சியில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் இந்த அரசின் கவனத்தை ஈர்த்த பின்பும், … Read more

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு:  4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிஹரன் … Read more

உதகை குதிரை பந்தயம் தொடங்கியது: தமிழ் புத்தாண்டு கோப்பையை 'டார்க் சன்' வென்றது

உதகை: உதகையில் 135-வது குதிரை பந்தயம் இன்று தொடங்கியது. தமிழ் புத்தாண்டு கோப்பையை “டார்க் சன்” குதிரை தட்டிச் சென்றது. நீலகிரி மாவட்டத்தின் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயங்கள் உதகையில் தொடங்கின. ஆண்டு தோறும் கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தொடங்கி ஜுன் … Read more

கரோனா இழப்பீடு பெற மே 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: கரோனா இழப்பீடு ரூ.50 ஆயிரம் பெற மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால அவகாச நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி மே 18 ஆம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை … Read more

ஒப்பந்ததாரர் கொலை வழக்கு எதிரொலி: பதவியை ராஜினாமா செய்கிறார் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா 

ஷிவ்மோகா: ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் தன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஷிவ்மோகா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரப்பா, “கட்சிக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பாதால் ராஜினாமா செய்கிறேன். ஆனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. இந்த சர்ச்சையிலிருந்து நான் வெளியே வருவேன்” என்று கூறினார். நடந்தது என்ன? கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் … Read more

கொடைக்கானலில் 3 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பால் நகருக்குள் நுழையும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்தன. மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைச்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சித்திரை தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி, வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களாக உள்ளது. இதையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் தங்கள் வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கினர். நேற்று காலை … Read more

'ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதியுங்கள்' – கர்நாடக முதல்வருக்கு மாணவி கோரிக்கை

கர்நாடகா: “நாட்டின் எதிர்காலம் நாங்கள் என்பதை உணர்ந்து, ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எங்களை அனுமதிப்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பரிசீலிக்க வேண்டும்” என்று, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவி ஆலியா ஆஸாதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை அந்த நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை. இந்து மாணவர்களும் காவி துண்டு அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வந்தனர். … Read more