ஷாங்காய் ஊரடங்கு: எதிர்ப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா

பெய்ஜிங்: ஷாங்காயில் லட்சக்கணக்கான மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், மக்களின், உலக நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து பொருளாதாரத் தேவைக்கான சில தளர்வுகளை சீனா அமலுக்கு கொண்டுவந்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் ஷாங்காய். இங்கு கரோனா தொற்று பரவியதால், கடந்த 5 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் சுமார் 24,659 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.இதனால் அங்கு ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள், … Read more

தமிழகத்தில் பிளஸ் 1 மதிப்பெண் வழங்கப்படாததால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் மாணவர்களுக்கு சிக்கல்

சென்னை: நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவில் கடந்த ஆண்டு பிளஸ் 1 மதிப்பெண் விவரம் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்படஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும்நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்புஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வுஜூலை 17-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு … Read more

'இன அழிப்பில் ஈடுபட்டுள்ளார் புதின்' – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

புதினை போர்க் குற்றவாளி என்று பகிரங்கமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது ரஷ்யா இன அழிப்பில் ஈடுப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைனின் மரியுபோல் துறைமுக நகரைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் அன்றாடம் உக்ரைனில் இருந்து அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு, பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. ரஷ்யா பாலியல் பலாத்காரங்களை ஒரு போர் உத்தியாகவே பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் அயோவா நகரில் நடந்த நிகழ்ச்சி … Read more

கொலை வழக்கில் கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – கூலிப்படை தலைவனுக்கு தூக்கு தண்டனை, இருவருக்கு இரட்டை ஆயுள்

கும்பகோணம்: கொலை வழக்கில் கூலிப்படை தலைவனுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் சென்னியமங்கலத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் மகன் செந்தில்நாதன் (35). இவர், அருகில் உள்ள திப்பிராஜபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (எ) கட்டை ராஜா (43). இவர் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு … Read more

ரஷ்யாவைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை: அதிபர் விளாடிமிர் புதின் விளக்கம்

மாஸ்கோ: ரஷ்யாவை பாதுகாக்க உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் நடவடிக்கை சரியானதே என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்துக்கு நேற்று ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் சென்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது.இன்றைய சூழலில், யாரையும்எந்த ஒருநாடும் தனிமைப்படுத் துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத … Read more

தமிழகம், புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் – ஏப்.15 முதல் ஜூன் 14 வரை அமல்

தூத்துக்குடி / நாகர்கோவில்: தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாள் (ஏப்.15) முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி நகரம் வரையான கிழக்கு கடற்கரைப் பகுதியில், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இக்காலத்தில் … Read more

அயோத்தியா மண்டப விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – சட்டப்பேரவையில் வானதி சீனிவாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதம் வருமாறு: வானதி சீனிவாசன் (பாஜக): சென்னை மேற்கு மாம்பலத்தில் கலாச்சார, ஆன்மிகவாதிகளால் நடத்தப்படும் அயோத்தியா மண்டபம், இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சமநீதியாக இருக்க வேண்டும் சமூக நீதி என்றால் அது சமநீதியாக இருக்க வேண்டும். ‘இந்த ஆட்சி … Read more

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தந்ததாக வழக்கு – அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜர்

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரை, 2017 ஏப்.16-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். … Read more

மீனவர்களின் ஜாமீனுக்கு ரூ.1 கோடி கேட்பதா? – இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: மீனவர்களை ஜாமீனில் விட தலா ரூ.1 கோடி கேட்கும் இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய இடத்தில் உள்ள நீதிமன்றங்களே, அநீதியான தீர்ப்பை வழங்கும் நடைமுறை இலங்கையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை மார்ச் 23-ம் தேதி சிறைபிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு, … Read more

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளே இல்லை: டீன் அறிவிப்பு

சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை கரோனா சிகிச்சை பெறுபவர்கள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளதாக டீன் தேரனிராஜன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்ட வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 229 பேர் மட்மே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும 95 பேர் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை … Read more