சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றுஅதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந் நிலையில், தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்.5-ம் தேதி (இன்று)கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்தது. அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சியினர் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டஎரிபொருட்களின் விலை உயர்வுநாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. விலை உயர்வு குறித்துமக்களவையில் விவாதிக்கும்படிபல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலங்களவையிலும் இதே பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று காலை கூடியதும் எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் … Read more

இலங்கை முழுவதும் மக்களின் போராட்டம் வலுத்து வருவதால் பதற்றம்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் வலுத்து வருகிறது. நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, இடைக்கால அமைச்சர்களாக 4 பேர் பொறுப்பேற்றுள்ளனர். ஒருங்கிணைந்த அரசு அமைக்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் சரிந்ததால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள் … Read more

துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதத்துக்காக; தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: துறைகள் வாரியான மானியக் கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை நாளை (6-ம் தேதி) கூடுகிறது. முதல்நாளில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. மானியக் கோரிக்கைகளில் இடம் பெறும் புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 18-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 19-ம் … Read more

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாயின. இதையடுத்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. சித்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியுள்ளது. ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாவட்டங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. அமராவதியில் இருந்து புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். நிர்வாகத்தை எளிமையாக்கவும், அரசின் நலத்திட்டங்கள் விரைவில் மக்களை போய்ச் சேரவும் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் … Read more

பெண்கள், பொதுமக்களுக்கான 'காவல்  உதவி' செயலி அறிமுகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: காவல்துறை கட்டுப்பாட்டுஅறையிலிருந்து நேரடியாக பெண்கள், பொதுமக்களுக்கான சேவை; ‘காவல் உதவி’ செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க … Read more

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் புதிய வாகனங்கள்: முதல்வர் வழங்கினார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலான 69 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, 2 அலுவலர்களுக்கு வாகனங்களை வழங்கினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் … Read more

இளையராஜா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு: இன்ரிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 1980-களில் வெளியான 20 தமிழ் திரைப்படங்களின் இசையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இன்ரிகோ (INRECO) உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1978 -80களில் வெளியான, 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசைப் பணிகளுக்கு, படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை … Read more

'நேரில் வந்து மனுவை வாங்குங்கள்' – தஞ்சை ஆட்சியரகம் முன் தரையில் படுத்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். மனுவை வாங்க ஆட்சியர் வராததால், ஆட்சியரகத்தில் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்குக் கர்நாடக அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியதைக் கண்டித்தும், ஆற்றில் மணல் எடுப்பதையும், குவாரி அமைப்பதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000-ம் வழங்க … Read more

இலங்கையின் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை: கே.எஸ்.அழகிரி

சென்னை: பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்கு இந்திய அரசு நிதியுதவி செய்கிற அதேவேளையில், இலங்கையில் வாழ்கிற பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் உணவு தானியங்கள், எரிபொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாததால் மக்கள் கடும் அவதிக்கு … Read more