சீமை கருவேல மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம்
சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதிக் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளன. … Read more