12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்வுக்கான தகுதித் தேர்வு அல்ல; சியுஇடி தேர்வை திரும்பப் பெறுவீர்: ஓபிஎஸ்

சென்னை: “சியுஇடி நுழைவுத் தேர்வை அனுமதித்தால் 12 ஆம் மதிப்பெண்ணிற்கு மதிப்பு இருக்காது. 12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆகையால், நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் … Read more

ஹைதராபாத்தில் போதை விருந்தில் பங்கேற்ற நடிகை, பாடகர் உட்பட 144 பேர் பிடிபட்டனர்

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற போதை விருந்தில் பங்கேற்ற நடிகை, பாடகர் உட்பட 144 பேர் பிடிபட்டனர். ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அந்த ஓட்டலில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. போதை விருந்தில் பங்கேற்ற 144 பேரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களில் நடிகை நிஹாரிகாவும் ஒருவர். … Read more

பொது இடங்களுக்கு வருவோர் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை: உத்தரவை திரும்ப பெற்றது பொது சுகாதாரத்துறை

சென்னை: பொது இடங்களுக்கு வருவோர் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பொது சுகாதாரத் துறை திரும்பப் பெற்றது. நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஏப்.1-ம் தேதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளன. தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பொது சுகாதாரத் துறை விதித்து … Read more

இந்து பண்டிதர்கள் விரைவில் காஷ்மீர் திரும்புவார்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர் நம்பிக்கை

ஜம்மு: கடந்த 1990-ம் ஆண்டில் காஷ்மீர் இந்து பண்டிதர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. சுமார் 8 லட்சம் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறி பஞ்சாப், டெல்லியில் அகதிகளாக குடிபெயர்ந்தனர். இதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் காஷ்மீர் பண்டிதர்களின் வலியை நாடு முழுவதும் உணர செய்துள்ளது. ஜம்முவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்த திரைப்படத்தை குறிப்பிட்டார். அவர் பேசியதாவது: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் … Read more

உக்ரைனில் குவியல் குவியலாய் பிணங்கள்: திட்டமிட்ட படுகொலை என அமைச்சர் குலேபா குற்றச்சாட்டு

கீவ்: தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ரஷ்யாவின் திட்டமிட்ட படுகொலை என்றும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் … Read more

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏப்.7-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டாமாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6, 7-ம் தேதிகளில் தமிழ்நாடு, … Read more

இலங்கையில் அவசரநிலையை எதிர்த்து போராட்டம்: சமூக ஊடகங்கள் முடக்கம்

கொழும்பு: இலங்கையில் அவசரநிலை மற்றும் ஊரடங்கு உத்தரவைக் கண்டித்து கொழும்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இலங்கை அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. உணவு, எரிபொருளுக்கு மக்கள் திண்டாடுகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. … Read more

திமுக அரசு பொறுப்பேற்று 11 மாதங்களில் தமிழகத்துக்கு ரூ.68,375 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: 2.05 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என முதல்வர் பெருமிதம்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.68,375.54 கோடிமதிப்புள்ள 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 402 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதன்மூலம் எவ்வளவு கோடி முதலீடுகள் வரும் எனவும் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகத்தை மாற்றி, மாநில வளர்ச்சிக்கும் … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவு: புதிய பிரதமரை எதிர்க்கட்சிகள் அறிவித்ததால் அரசியலில் பெரும் குழப்பம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து, இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய பிரதமரை அறிவித்துள்ளதால் அங்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் முதன்முதலாக சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில்முதன்முறையாக சங்க காலபாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வுப் பணிகள் கடந்த அக்டோபரில் தொடங்கி 7 மாத காலமாக நடந்து வருகிறது. அகழாய்வுக்காக 9 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 60-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் ஆதிச்சநல்லூர் வந்து அகழாய்வுப் … Read more