சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும்: அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தப்பட்டதற்கு காரணம் மத்திய அரசு என தமிழ்நாடு அரசு தரப்பில் … Read more

கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதிகரிக்கும் வெப்பநிலை: மாலையில் மட்டுமே குளிர்ந்த சீதோஷ்ணநிலை  

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதிகரிக்கும் வெப்பநிலையால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாலை முதல் அதிகாலை வரை மட்டுமே குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. தமிழக முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருவதால் வாரவிடுமுறை நாட்களில் கோடைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலாபணிகள் செல்வது அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கம்போல் இந்தவாரமும் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் சுற்றுலாபயணிகளுக்கு இங்குநிலவும் சீதோஷ்ணநிலை பாதி ஏமாற்றத்தை தான் தந்துவருகிறது. காலையில் சூரியன் உதிக்கத்துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. மாலை … Read more

மாற்றுத் திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம்: நாளை தொடக்கம்- தமிழக அரசு

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம் நாளை தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “ தமிழக அரசு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கும், திறம்பட நடத்துவதற்கும் தொழில்முனைவோர்களை உருவாக்கவும், பல்வேறு திட்டங்களையும், பயிற்சிகளையும், செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையகரகம் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக லோன் மேளா, தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகளை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. … Read more

ஏப்ரல் 3: தமிழக நிலவரம் | மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண். மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஏப்.2 வரை ஏப்.3 ஏப்.2 … Read more

ஏப்ரல் 3: தமிழக நிலவரம் | தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

தமிழகத்தில் இன்று 23 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 09 பேர்: 32 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 23 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,910. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,51,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,610. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 09 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

பல கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்: கீழக்கரையைச் சேர்ந்த ஒருவரிடம் போலீஸார் விசாரணை  

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த ஒருவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் நகர் போலீஸாருக்கு வைரம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் ராமநாதபுரத்தில் கீழக்கரை ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் வந்த அரசு பேருந்தில் கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த முகம்மது காசீம் மகன் யூசுப் சுலைமான்(36) என்பவரை பிடித்து … Read more

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் நாளை உதயம்: மக்களவை தொகுதிக்கு ஏற்ப பிரிப்பு

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் மக்களவை தொகுதிக்கு ஏற்ப கூடுதலாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும் என கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஜனவரியில் 13 புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை கேட்டது. அதனடிப்படையில் 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு அரசிதழிலில் வெளியிட்டப்பட்டுள்ளது. ஆந்திர அரசு … Read more

நாளை 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு; வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: அன்புமணி  

சென்னை: நாளை 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளநிலையில் இன்று கசிந்துள்ளதால், முன்கூட்டியே வினாத்தாள் வெளியாவதைத் தடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறுகையில், ”தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில், நாளை நடைபெறவுள்ள கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் இன்று மதியமே வெளியாகி இருக்கிறது. தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த இரு வகை வினாத்தாள்களும் கசிந்ததால் … Read more

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: ஒரு விசைப்படகும் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இதனால் வேதனையடைந்த ராமேசுவரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 545 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இதில் இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். … Read more