வரும் 2024-ல் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

வரும் 2024-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு அமைந்துள்ளது. வரும் ஜூன், ஜூலைக்குள் மாநிலங்களவையில் 53 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிய வுள்ளது. 20 எம்.பி.க்கள் ஜூனிலும், 33 எம்.பி.க்கள் ஜூலையிலும் ஓய்வு பெறவுள்ளனர். இதில் 11 எம்.பி.க்கள் உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். கணிசமான இடங்கள் தற்போது உ.பி.யில் பாஜக எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதால், அதில் கணிசமான இடங்களை பாஜக பெறும். மேலும் 2024-ம் ஆண்டுக்குள் மேலும் 54 எம்.பி.க்கள் … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; 90 நாட்களுக்குள் தேர்தல்: நீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் … Read more

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு உண்டு: அன்பில் மகேஷ் திட்டவட்டம்

புதுக்கோட்டை: 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நிகழாண்டு இறுதித் தேர்வு உறுதியாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று (ஏப்.3) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நிகழ் ஆண்டு குறைந்த நாட்களே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால், பாடத் திட்டத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில்தான் தேர்வு நடைபெற உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு இறுதித் … Read more

ஹைதராபாத் | கனவு கண்ட வீட்டில் திருடுபவர் கைது: தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்

ஹைதராபாத்: ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் மஹேஷ் பகவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குண்டூர் மாவட்டம், பிடுகுராள்ளு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அம்பேத்கர் என்கிற ராஜு என்கிற ராஜேந்திரா (50). எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். சுமார் 21 வீடுகளில் தனி ஆளாக இவர் திருடி உள்ளார். ஒரு திருட்டு வழக்கில் வனஸ்தலிபுரம் போலீஸார் அம்பேத்கரை கைது செய்துள்ளனர். இவரிடம் விசாரணை நடத்தியதில், பகல் நேரங்களில் ஊருக்கு ஒதுக்குபுறமாக பணக்கார வீடுகளை நோட்டமிட்டதாகவும், அதில் பூட்டியுள்ள வீடுகளை … Read more

மதம், இனம், கட்சி, நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒரே தேசமாக நில்லுங்கள்: இலங்கை மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் கேப்டனின் நெகிழ்ச்சி பதிவு 

கொழம்பு: மதம், இனம், கட்சி, நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒரே தேசமாக நில்லுங்கள் என மக்களுக்கு இலங்கை முன்னாள் கிரிகெட் கேப்டன் ரோஷன் மஹாநாம வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 … Read more

18,999 ரூபாய்க்கு கிடைக்கும் சாம்சங் M33 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது

இந்திய மொபைல் போன் சந்தையில் M33 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். இந்நிறுவனம் மலிவான விலையில் 5G போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கத்தில் M33 5G போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆக்டா-கோர் எக்ஸினோஸ் புராசஸர், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் … Read more

தமிழகத்தின் உரிமைகளைக் கேட்டுப்பெறவே டெல்லி சென்றேன் யார் காலிலும் விழுவதற்காக அல்ல: ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தின் உரிமைகளைக் கேட்டுப்பெறவே டெல்லி சென்றேன் யார் காலிலும் விழுவதற்காக அல்ல என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமாரின் இல்லத் திருமணவிழா இன்று (3.4.2022) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொன்குமார் மகன் வினோத்குமார் – ரேவதி ஆகியோரது திருமணத்தை நடத்திவைத்து பேசியதாவது: நம்முடைய பொன்குமாரின் அருமை மகன் செல்வன் வினோத்குமாருக்கும், சென்னை – வேளச்சேரி பகுதியைச் சார்ந்த … Read more

அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து இழக்கும்: 5 மாநில தேர்தல்களில் தொகுதிகள் குறைந்த பிறகும் வளரும் பாஜக

அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் ஆபத்து காங்கிரஸுக்கு ஏற்படலாம் எனத் தெரிகிறது. மாநிலங்களவையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த காட்சிகள் தற்போது மாறியுள்ளன. மாநிலங்களவையில் 1990-களின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 108 உறுப்பினர்கள் இருந்தனர். அதே காலகட்டத்தில் பாஜகவுக்கு உறுப்பினர்களாக 55 எம்.பி.க்கள் இருந்தனர். தற்போது இந்தநிலை தலைகீழாக மாறி, ஆளும் கட்சியான பாஜகவுக்கு 100 எம்.பி.க்கள், காங்கிரஸுக்கு வெறும் 33 எம்.பி.க்கள் என்றாகி விட்டது. மாநிலங்களவையில் எதிர்க் கட்சியாக தொடரும் … Read more

பதவி விலகுகிறார் இம்ரான் கான்? – நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு முடிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பதவி விலகக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் … Read more

கரோனா தாக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளால் உழலும் மக்கள் மீது சொத்துவரி சுமையா?: வைகோ வேதனை

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 600 சதுரடிக்குக் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித … Read more