டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்; சோனியா காந்தி பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 2006-ம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க … Read more

மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்

பெங்களூரு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த கன்னட‌ நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பிரபல கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் (46) கடந்த ஆண்டுஅக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர்மறைவு கர்நாடகாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று பெங்களூரு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சதாசிவ நகரில் உள்ள புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி | ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இப்படியொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததே இல்லை என்றுதான் உலக ஊடகங்கள் அனைத்துமே விமர்சிக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இனியும் பொறுக்க முடியாது என்ற கோபத்துடன் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிடத் தொடங்கினர். அடுத்தடுத்து இரண்டு நாட்களும் போராட்டம் நடைபெற இரவோடு இரவாக அவசரநிலையை பிரகடன்ப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இப்போதும் நாடு தழுவிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கோஷம் அனைத்திலும் ராஜபக்சே என்ற பெயர் ஒலித்தது. மக்களுக்கு … Read more

புதுச்சேரியில் அதிகாரிகளின் தன்னிச்சையான மின் கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்க: ரங்கசாமியிடன் அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் தலைமைச் செயலர், மின்துறை செயலர் மற்றும் மின்துறை உயரதிகாரிகளின் சட்டவிரோதமான தன்னிச்சையான மின் கட்டண உயர்வு அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி ரத்து செய்ய வேண்டும் என கூட்டணிக் கட்சியான அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த 1-ம் தேதி முதல் புதிய மின் கட்டண உயர்வை மின்துறை … Read more

எஸ்சி, எஸ்டி பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கினால் ஊழியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பதவி உயர்வுக்கான ஒதுக்கீட்டைநீக்குவது எஸ்சி, எஸ்டி ஊழியர் களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கீழுள்ள சுமார் 75 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 3,800 பதவிகள்(கேடர்கள்) உள்ளன. ஒவ்வொருகேடர் கட்டுப்பாட்டு அதிகாரியும்,அந்தந்த கேடருக்கான இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் பதவிஉயர்வுகளைப் பெற்று வருகின்றனர். ஆனால் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு முறையில் போதுமான பிரதிநிதித்துவத்தின் அளவை … Read more

இலங்கை நெருக்கடி | அவசர நிலையை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு: மக்கள் கூடினால் கடும் நடவடிக்கை

கொழும்பு: இலங்கையில் அவசர நிலையை தொடர்ந்து திங்கட்கிழமை காலை வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் … Read more

மயிலாடுதுறை| ராட்சத குழாய்களை இறக்கும் ஓஎன்ஜிசி; தினகரன் கண்டனம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட வை. பட்டவர்த்தி கிராமத்தில் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் செயல் கண்டத்துக்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வை. பட்டவர்த்தி கிராமத்தில் ONGC நிறுவனம் திடீரென ராட்சத குழாய்களை கொண்டுவந்து இறக்கிவருவது கண்டனத்திற்குரியது. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு நடுவே இதற்கான கிடங்கினை அமைத்திருக்கிறார்கள். ONGC நிறுவனத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்பு மிக்க ‘இந்த்ஆஸ் எக்டா’ வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (இந்த்ஆஸ் எக்டா) மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கையெழுத்திட்டப் பிறகு … Read more

மெக்கா – மதினாவில் 2 வருடங்களுக்குப் பிறகு ரமலான் சடங்குகளுக்கு அனுமதி

ரியாத்: கரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா – மதினாவில் ரமலான் சடங்குகள் நடத்தப்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு ஹஜ் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை சுமார் 18 மாதம் நீடித்தது. இந்த நிலையில் கரோனாவுக்கு தடுப்பூசி … Read more

’10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு திமுக அரசுதான் காரணம்’ – இபிஎஸ்

சேலம்: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம் என்றும், மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு முறையாக வாதிடாத காரணத்தால்தான் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம், வீரபாண்டியில் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு … Read more