கோவாவில் தொங்கு சட்டசபை கணிப்பை தவிடுபொடியாக்கிய பாஜக

பனாஜி: கோவாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கைகாட்டிய நிலையில், அவற்றை தவிடுபொடியாக்கி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், அண்மை நிலவரப்படி பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆனால், … Read more

திருச்செங்கோடு: பள்ளியில் மாணவி தற்கொலை – காவல் துறை, கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை

நாமக்கல்: திருச்செங்கோட்டில் மாணவி ஒருவர் பள்ளி வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் இன்று (மார்ச் 12) மதியம் 2.30 மணியளவில் வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் அவர் பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்ததாகவும் போலீஸ் … Read more

நாளை கூடும் காங்கிரஸ் காரியக் கமிட்டி: புறக்கணிக்க ஜி 23 தலைவர்கள் முடிவு?

புதுடெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியை தொடர்ந்து பரபரப்பான சூழலில் காங்கிரஸ் காரியக் கமிட்டி நாளை கூடவுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தை ஜி 23 தலைவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த பஞ்சாபில் காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது. மொத்தம் மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எண்ணிக்கை தற்போது இரண்டு … Read more

”ரஷ்ய தாய்மார்களே…” – அன்று வேண்டுகோள் விடுத்த உக்ரைன் அதிபர் இன்று எச்சரிக்கை தொனியில் அறிவுரை

கீவ்: ”உங்கள் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ரஷ்ய தாய்மார்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை தொனியில் அறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 17-வது நாளாகத் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சாதாரண குடிமக்களும் பணியமர்த்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில், ”ரஷ்யத் தாய்மார்களுக்கு நான் இதனை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டில் சண்டையிட அனுப்பாதீர்கள். உங்கள் மகன்கள் … Read more

நீலகிரி பெண் கைவினைக் கலைஞர்களுக்கு கிடைத்த விருதால் தோடர் இன மக்களுக்கு கிடைத்த கூடுதல் கவுரவம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இன கைவினைக் கலைஞர்கள் 2 பேருக்கு ‘நாரி சக்திபுரஸ்கார்’ விருது வழங்கப்பட்டுஉள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தொழில்முனைவோர், விவசாயம், சமூகப் பணி, கல்வி மற்றும் இலக்கியம், மொழியியல், கலை மற்றும்கைவினை அறிவியல், தொழில்நுட்பம், மாற்றுத் திறனாளிகள் உரிமை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘நாரி சக்திபுரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. பூத்துக்குளி எம்ப்ராய்டரி சர்வதேச பெண்கள் தினத்தைஒட்டி டெல்லியில் … Read more

பாஜக எண்ணிக்கையை குறைக்க முடியும்; சமாஜ்வாதி நிரூபித்து விட்டது: அகிலேஷ் சிங் யாதவ் கருத்து

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ் வாதி கட்சி, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி மட்டும் 111 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பிறகு முதல் முறையாக … Read more

80+ மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது ரஷ்ய படையினர் குண்டு வீசி தாக்குதல்: உக்ரைன் தகவல்

மரியுபோல்: மரியுபோல் நகரில் 80-க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது ரஷ்ய படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய படைகளின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேற ரஷ்யா அனுமதி மறுக்கிறது என்று உக்ரைன் அரசும், மக்களை வெளியேற்ற உக்ரைன் தவறிவிட்டது என்று ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 17 நாட்களாக … Read more

அசாம் இளைஞர் ரயிலில் திடீரென உயிரிழப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை

திருப்பூர்: அசாம் மாநில இளைஞர் ரயிலில் உயிரிழந்த நிலையில், சில மணிநேர பயணத்துக்கு பின் அவரது உடல் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருப்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஒரு நாள் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று காலை 10.45 மணிக்கு திருப்பூருக்கு வந்தடைந்தது. ரயிலில் எஸ்.3 பெட்டியில் இருந்து 2 … Read more

மருத்துவமனையில் சந்திரசேகர ராவுக்கு திடீர் சிகிச்சை

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் (68), நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடது தோள் பட்டையிலும், இடது காலிலும் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது இதயம் தொடர்பான நோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் சுமார் 3 மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர் கள் கூறுகையில், ‘‘அவரது முதுகு … Read more

இலங்கையில் உச்சம் தொட்டது பெட்ரோல்- டீசல் விலை: ஒரே நாளில் ரூ.50; ரூ.75 உயர்வு

கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் பெட்ரோல் ரூ. 50-ம் டீசல் ரூ.75-ம் உயர்த்தப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 43.5% அதிகரித்து 254 ரூபாயாகவும், டீசல் 45.5% அதிகரித்து 176 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து … Read more