சேலம்: சாலை விபத்தில் இறந்த நண்பரின் நினைவு நாளில் ரத்த தானம் வழங்கி  விழிப்புணர்வு

சேலம்: சேலம் அருகே சாலை விபத்தில் சிக்கி ஏராளமான ரத்தம் வெளியேறியதால் மரணமடைந்த இளைஞரின் நினைவு நாளில், அவரது நண்பர்கள் ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கை.புதுார் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சீனிவாசன் (26 ) திருச்சியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி திருச்சியில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நடந்த … Read more

உத்தராகண்ட் மக்களால் 'பாஜக ஜிந்தாபாத்' என எப்படி சொல்ல முடிகிறது? – ஹரிஷ் ராவத் வியப்பு

டேராடூன்: “மக்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள் என நம்பினோம். எங்களின் முயற்சியில் இடைவெளி இருந்திருக்கலாம். அதனை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்” என உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக முன்னிலை வகித்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் … Read more

”என் மகன் விவசாயத்தில் ஈடுபடுவார்” – பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் நெகிழ்ச்சிப் பேட்டி

திருப்பத்தூர்: ”விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டுள்ள என் மகன், தற்போது பொருளாதார வசதி இல்லாததால் வரும் காலங்களில் கண்டிப்பாக விவசாயத்தில் ஈடுபடுவார்’’ என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பேரறிவாளன் (52). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, சிறுநீரக தொற்று, மூட்டு வலிக்கு மருத்துவ சிகிச்சை பெற இருந்ததால் கடந்த … Read more

’புல்டோசர் பாபா’ யோகிக்கு சமர்ப்பணம் – உ.பி.யில் புல்டோசரில் வலம் வந்து வெற்றி ’ஹோலி’ கொண்டாடிய பாஜகவினர்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச தேர்தலில் 270+ தொகுதிகளை வசப்படுத்தி மீண்டும் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைக்கும் நிலையில், அங்கு பாஜகவினர் புல்டோசரில் ஏறி வெற்றி வலம் வந்தனர். தலைநகரான லக்னோவின் பாஜக தலைமையகத்தில் முன்கூட்டியே ’ஹோலி’ கொண்டாடப்பட்டது. இன்று வெளியான ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகளில் பாஜகவிற்கு நான்கு மாநில சட்டப்பேரவைகளில் வெற்றி கிடைத்துள்ளது. இதில் அதிகமாக உத்தரப் பிரதேசத்தின் வெற்றியே கொண்டாடப்படுகிறது. லக்னோவின் சாலைகளில் பாஜகவினர் புல்டோசர்களில் வலம் வந்தனர். இதன் பின்னணியில் உ.பி.-யின் … Read more

காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்: புதுச்சேரி பாஜக

புதுச்சேரி: “காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்“ என்று புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கருத்து கூறியுள்ளார். நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் இன்று மாலை நடந்தது. அண்ணா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மிஷன் வீதி வரை மேளதாளங்கள் முழங்க நடத்தப்பட்டது. இதில் மகளிர் அணி சார்பில் பாரத மாதா வேடம் அணிந்தும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பாஜக தொண்டர்கள் … Read more

"சாதி – மத அரசியலுக்கு சமாதி கட்டியிருக்கிறார்கள் உ.பி மக்கள்” – முதல்வர் யோகி வெற்றி உரை

லக்னோ: “உத்தரப் பிரதேசத்தில் கிடைத்திருக்கும் வெற்றி, சாதி – மத அரசியலுக்கு சமாதி கட்டியிருப்பதுடன், மக்கள் வளர்ச்சியின் பக்கம் இருப்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்நாத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக. இந்த வெற்றியைத் தொடர்ந்து பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகிறார். லக்னோவில் கட்சித் தொண்டர்களிடம் வெற்றி உரையாற்றிய முதல்வர் யோகி … Read more

மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை பத்திரமாக ஒப்படைத்த புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்!

புதுச்சேரி: மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை ஆட்டோ ஓட்டுநர் பத்திரமாக ஒப்படைத்தார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் தன்னுடைய மருமகளை மருத்துவப் பரிசோதனைக்காக புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். பின்னர், ஆட்டோவை திருப்பியபோது எதிரில் டூவீலர் நிறுத்தி இருந்த பகுதியில் 500 ரூபாய் நோட்டு கட்டு சாலையில் கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது அது ரூ.50,000 கட்டு என்பது தெரிந்தது. அப்பணக்கட்டை எடுத்து அதை நேராக … Read more

'ஒரு ஹீரோ ஹோண்டா பைக், இரு அறை வீடு' – முதல்வர் சரண்ஜித்தை தோற்கடித்த மொபைல் கடை ஓனர்

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை மொபைல் கடை நடத்திவரும் ஒருவர் தோற்கடித்துளளார். அதுவும், 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் … Read more

மார்ச் 10: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,598 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.9 வரை மார்ச்.10 மார்ச்.9 … Read more

"சாதியை ஓரம்கட்டி வளர்ச்சி அரசியலைத் தேர்ந்தெடுத்த உ.பி. மக்கள்" – பிரதமர் மோடி வெற்றி உரை

புதுடெல்லி: “உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கருத்துக் கணிப்புகள் தவறானவை என கோவா தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன” என்று வெற்றி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசதம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றிக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசியது, “இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, பாஜகவை … Read more