தமிழக காவல்துறையில் மூத்த அதிகாரிகளின் சேவையை பரவலாக்குக: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் காவல்துறையில் மூத்த அதிகாரிகளின் சேவை பரவலாக்கப்பட வேண்டும் என்று பாஜக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குனர்கள் நிலையில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகள் காவல்துறை தலைமை இயக்குனர்களாக (டி.ஜி.பி) பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வு இவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களையும் சேர்த்து தமிழ்நாடு காவல் துறையில் தலைமை இயக்குனர்கள் நிலையிலான அதிகாரிகள் எண்ணிக்கை 16 ஆக … Read more

5 மாநில தேர்தல் முடிவுகள்: உ.பி உட்பட 4 மாநிலங்களில் பாய்ச்சல் காட்டிய பாஜக

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களில் பாஜக பாய்ச்சலைக் காட்டி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் என்று நாட்டிலேயே அதிகளவில் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கு எப்போதுமே மினி நாடாளுமன்றத் தேர்தல் என்ற அடைமொழியும் உண்டு. இத்தேர்தலில் பகல் ஒரு மனி நிலவரப்படி பாஜக 272, சமாஜ்வாதி 122, பகுஜன் … Read more

இந்தோனேசியா, செஷல்ஸ் நாடுகளில் கைதான தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் … Read more

பஞ்சாப் தேர்தலில் அம்ரீந்தர் சிங் தோல்வி: காங்கிரஸ் தலைவர்களும் தோல்வி முகம்

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் தோல்வியடைந்தார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி … Read more

இந்தோனேசியா, செஷல்ஸ் நாடுகளில் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: மநீம

சென்னை: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று நடிகர் கமல்ஹாசனை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காலங்காலமாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர்களும் இதர பகுதி மீனவர்களும் ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் குடும்பங்களைப் பிரிந்து பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து வருபவர்கள் இவர்கள். இந்த … Read more

கோவா தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர்ந்து முன்னிலை; வேட்பாளர் ஆனந்தக் கண்ணீர்

பனாஜி: கோவா தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அம்மாநில வைபோல் தொகுதி வேட்பாளர் விஸ்வஜித் ரானே ஆனந்தக் கண்ணீர் சிந்தி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பகல் 12 மணி நிலவரப்படி அங்கு பாஜக 18, காங்கிரஸ் 11, திரிணமூல் 4, ஆம் ஆத்மி 3, சுயேச்சைகள் 4 என்று முன்னிலை வகிக்கின்றன. … Read more

ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 வரை லஞ்சம்?- தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 313 கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் நிலையில் உள்ள (கொள்முதல் பணியாளர்கள்) 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, அந்த நெல்லை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அரவை ஆலைக்கு … Read more

பிரியங்கா முயன்றும் பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ்: பெரும் தோல்வி காணும் மாயாவதி

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் செய்த நிலையிலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்திக்கும் சூழல் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. உ.பி. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் … Read more

இந்தோனேசியா, சீஷெல்ஸ்தீவில் குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் சிறைபிடிப்பு: அத்துமீறிய இலங்கை மீனவர்கள் கைது

நாகர்கோவில் / தூத்துக்குடி: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் இந்தோனேசியா மற்றும் சீஷெல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மரியா ஜாசிந்தாஸ் (34), இம்மானுவேல் (29), முத்தப்பன் (48), சிஜின் (29), பிரவீன் (19), லிபின் (34), தோமன் (24), ஜாண் போஸ்கோ (48) ஆகிய 8 மீனவர்கள், அந்தமானைச் சேர்ந்த சுமதி பெய்டியா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், அந்தமான் தீவில் … Read more

யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் முன்னிலை: முதன்முறை களம் கண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி முகம் 

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் முதன்முறையாக களம் கண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதுவரை இல்லாத நிலையில் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளார். அகிலேஷ் … Read more