’நான் ஓடி ஒளியவும் இல்லை, யாருக்கும் அஞ்சவும் இல்லை’ – வீடியோ வெளியிட்டு ஜெலன்ஸ்கி தகவல்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 13- வது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், “நான் ஓடி ஒளியவும் இல்லை, யாருக்கும் அஞ்சவும் இல்லை” எனத் தெரிவித்து தனது அலுவலகத்தில் இருந்து வீடியோ ஒன்றை உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்தத் தாக்குதை உக்ரைன் அரசு, அந்நாட்டு மக்களின் துணையுடன் எதிர்கொண்டு வருகிறது. … Read more