'44 வாக்குகளே கிடைத்ததால் விரக்தி' – திருப்பூரில் மநீம வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுவது: திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுப்பாத்தாள் (50). மணி மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் நடந்த … Read more

திருப்பதிக்கு வயது 892: பெயர் சூட்டியது ராமானுஜர்- திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர் தகவல்

திருப்பதி நகருக்கு வயது 892. இதனையொட்டி, நேற்று திருப்பதி உதயமான நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வைணவ ஆச்சாரியரான ராமானுஜர் கி.பி 1130-ம் ஆண்டில் திருப்பதி வந்தபோது, கோவிந்தராஜ புரமாக இருந்த ஊர், திருப்பதி என பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சில கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்த பின்னர், திருப்பதி நகரம் உருவாகி 892 ஆண்டுகள் ஆனதாக தெரிய வந்ததால், நேற்று திருப்பதி நகரம் உதய தினத்தை திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி தலைமையில் விழாவாக … Read more

'போர் வேண்டாம்.. எங்களுக்கு அவமானமாக இருக்கிறது'- ரஷ்ய மக்கள் முழக்கம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: போர் வேண்டாம்! “No to war!” என்ற முழக்கத்துடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் பிப்ரவரி 24, 2022. வழக்கமான நாளாக அமையவில்லை. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் அறிவித்த விநாடிகளில் கிழக்கு உக்ரைன் அதிரத் தொடங்கியது. 2 ஆம் நாளான இன்று தலைநகர் கீவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதில் உக்ரைன் நாட்டவரும் அடங்குவர். … Read more

ஜெயலலிதா படத்துக்கு மரியாதை: தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அரசின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளானபிப்.24-ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டு ஜன.28-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, முதல்முறையாக இந்த ஆண்டு அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள … Read more

கர்நாடக மாநிலம் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் எஸ்டிபிஐ, பிஎப்ஐ-க்கு தடை கோரி போராட்டம்

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப் பட்டார். இதன் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினர் இருப்பதாக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் எஸ்டிபிஐ, பிஎப்ஐ ஆகிய‌ அமைப்பினர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். … Read more

'30 ரஷ்ய ராணுவ டேங்குகள்; 800 வீரர்களை வீழ்த்தியுள்ளோம்': உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

கீவ்: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா இரண்டாவது நாளாக நடத்தி வரும் நிலையில் இதுவரை ரஷ்யாவின் 30 ராணுவ டேங்குகள், 800 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஹனா மல்யார் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிரிகள் தரப்பில் இதுவரை 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்க்ள், 30 ராணுவ டாங்குகள், 130 ஏவுகணை யூனிட்டுகளை உக்ரைன் படைகள் வீழ்த்தியுள்ளன என்று ட்வீட் செய்துள்ளார். … Read more

தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும்சமூகநலத் திட்ட பயன்களைப் பெறுவதற்கும், கல்விச் சான்று பெறுதல், பத்திரப் பதிவுகள்உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசுஇ-சேவை மையங்களில் ஆதார்பதிவு மையம் செயல்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் அவ்வப்போது சிறப்பு முகாம் களும் நடத்தப்படுகின்றன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் … Read more

கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் இரண்டரை மடங்கு அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

‘ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர்’ என்ற தலைப்பில் வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு, ‘பி.எம்.கிஸான் சம்மான் நிதி’ திட்டம் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் இதே நாளில் தொடங்கப்பட்டது. இதில் விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்குரூ.2 … Read more

2-ம் நாள் ராணுவ நடவடிக்கை: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா குண்டு மழை; செர்னோபிலைக் கைப்பற்றியதால் பதற்றம்

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இரண்டாம் நாளை எட்டியுள்ள நிலையில் தலைநகர் கீவில் வெடுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கீவ் நகரில் பதற்றமான சூழலில் நிலவுகிறது. உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இன அழிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மிக நேர்த்தியாக வார்த்தைகளைக் கையாண்டு போரைத் தொடங்கிய ரஷ்யா இரண்டாம் நாளான இன்று தலைநகர் கீவைக் குறிவைத்துள்ளது. … Read more

முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா; தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு: பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சி

சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தேசியகட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பது, பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் முயற்சி என்று கூறப் படுகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தேசிய மற்றும் மாநிலக்கட்சிகள் கூட்டு சேர்ந்து தேர்தலைசந்திக்க முடிவெடுத்து, அதற்கானமுன்னெடுப்புகளை தொடங்கியுள் ளன. இதுதவிர, இந்த … Read more