கோவையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட சிறப்பு மேற்பார்வையாளர் ஆய்வு

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, கோவையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட சிறப்பு மேற்பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 2,303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் காலை முதலே வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து … Read more

பஞ்சாபில் சாதிக்குமா ஆம் ஆத்மி?- 4 முனைப் போட்டியில் கேஜ்ரிவாலின் அரசியல் கணக்கு

பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. தற்போது சிரோமணி அகாலி தளம் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே, அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியால் பஞ்சாபின் 117 … Read more

ஏமன் சிறைச்சாலை மீதான சவுதியின் தாக்குதல் 100 பேர் பலி: ஐ.நா கண்டனம்

ஏமனின் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏமன் செய்தித் தொடர்பாளர் பஷிர் உமர் கூறும்போது, “ஏமனின் சாடா நகரில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இதுவரை 100 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். சிறைச் சாலைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் காட்சிகளை காண முடிகிறது” … Read more

வாக்குவச்சாவடி மாற்றாததால் பரமத்திவேலூரில் தேர்தல் புறக்கணிப்பு: கருப்புக் கொடி ஏந்தி மக்கள் போராட்டம்

நாமக்கல்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலை பரமத்திவேலூர் பேரூராட்சி 2-வது வார்டு மக்கள் புறக்கணிப்பு செய்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டபோது 3-வது வார்டு 2-வது வார்டாக மாற்றப்பட்டது. இதுதவிர, வார்டுக்கு உட்பட்ட ராஜாநகருக்கான வாக்குச்சாவடி 3 கி.மீ தள்ளி அமைக்கப்பட்டது. இதனால், ராஜாநகர் பகுதி மக்கள் தேர்தல் சமயங்களில் நீண்ட தூரம் சென்று வாக்களித்து திரும்ப வேண்டிய … Read more

''உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்''- உவேசா பிறந்தநாளில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

சென்னை: ”உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்” என்று தமிழ்த் தாத்தா உவேசா பிறந்தநாளில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். உ.வே.சா. தமிழகத்தின் தொலைதூர பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி, சங்க இலக்கியத்தின் கருவூலங்களாகத் திகழும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பல்வேறு சிற்றிலக்கிய நூல்கள் பலவற்றையும் பதிப்பித்து தமிழ் சமுதாயத்திற்கு பெரும்தொண்டாற்றினார். தமிழ் சங்க இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளை தேடித்தேடி பதிப்பித்து தன் வாழ்நாளை தமிழ்ப்பணிக்காகவே செலவிட்ட … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்: கட்டிடங்கள், சாலைகள் சேதம்: 13 காயம்

ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. இதுகுறித்து ஜப்பான் புவியியல் மையம் தரப்பில், “ ஜப்பானில் இன்று (சனிக்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒய்டா, மியாசாகி ஆகிய பகுதிகளில் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை” என்று … Read more

திமுகவில் வாரிசுகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர் – வாக்களித்த பின் கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி: “திமுகவினரின் ஆணவப் பேச்சுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் தீர்ப்பு அளிப்பார்கள்” என காவேரிப்பட்டணத்தில் வாக்களித்த பின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் காவேரிப்பட்டினம், நாகரசம்பட்டி, பர்கூர், ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து … Read more

முலாயம் ஆதரவு யாருக்கு; மகனுக்கா? மருமகளுக்கா?- உ.பி. தேர்தலில் சூடுபிடிக்கும் விவாதம்

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் அவரது மருமகள் அபர்ணா யாதவுக்கே என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் தற்போது நடந்து வருகிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. 3-ம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்?- ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: ரஷ்யப் படைகள் வரும் நாட்களில் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், எந்தநேரத்திலும் போர் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை … Read more

ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்; வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு முன் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு: ககன்தீப் சிங் பேடி

சென்னை: “வாக்குச்சாவடிகளுக்கு 5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சென்னை மாநகராட்சி … Read more