கூகுள் சேவைகளைத் தொடர்ந்து வாட்ஸ் அப் சேவையும் பாதிப்பு
ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப் செயலி பயன்பாடு வியாழக்கிழமை அன்று பாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் பல பயனர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளனர். முன்னதாக வியாழக்கிழமை காலை அன்று கூகுளின் ஜிமெயில், ட்ரைவ் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. வியாழனன்று மாலை வாட்ஸ் அப் செயலி முடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர். இது குறித்துக் கூறியுள்ள தொழில்நுட்ப இணையதளம் ஒன்று, “சில பயனர்களுக்கு வாட்ஸ் … Read more