உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நகைக்கடன் ரத்து செய்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி’ என்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னதான் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் … Read more

சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவாய் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

புதுடெல்லி: சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய்க்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று முதல் சோதனை நடந்து வருகிறது. நிதி ஆவணங்கள், வரவு செலவு புத்தகங்கள், ஹூவாயின் இந்திய வணிகம், பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் குறித்து சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நடக்கும் சோதனை குறித்து ஹூவாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ‘‘வருமான வரித்துறை அதிகாரிகள் … Read more

கனடா – அமெரிக்கா எல்லை அருகே பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம்

நியூயார்க்: கனடா – அமெரிக்கா எல்லை அருகே 4 பேர் அடங்கிய இந்தியக் குடும்பத்தினர் பனியில்உறைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டேல் (39).இவரது மனைவி வைஷாலிபென் ஜெகதீஷ் குமார் (37). இவர்களுக்கு மகள் விஹாங்கி ஜெகதீஷ்குமார் (11), மகன் தர்மிக் ஜெகதீஷ் குமார் (3) ஆகியோர் இருந்தனர். இவர்கள் 4 பேரும் ஒரு காரில் அமெரிக்கா – கனடா எல்லைப் பகுதியில் பனியில் உறைந்த நிலையில் சடலங்களாக கடந்த 22-ம் தேதி … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வித்தியாசமான வாக்குறுதிகளால் கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளர்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரத்தில் முக்கியக் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வித்தியாசமான பாணியில் பிரச்சாரம் செய்து கவனம் ஈர்த்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி 104வது வார்டான திருமங்கலம் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல். அப்துல் ஜலீல் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், தனது சின்னமான பூப்பந்து மட்டை சின்னத்தை மக்கள் மத்தியில் பதியவைப்பதற்கு புதிய பாணிகளை கையாண்டு வருகிறார். … Read more

குடுச்சி மூலிகையால் கல்லீரல் பாதிக்கும் என்பது தவறானது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘ஜிலோய் / குடுச்சி மூலிகை கல்லீரலைப் பாதிக்கும் என ஊடகங்களில் சில பிரிவினர் மீண்டும் தவறான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஜிலோய் / குடுச்சி மூலிகை பாதுகாப்பானது, தற்போது கிடைக்கும் தரவுகளின்படி குடுச்சி எந்தவித நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தாதது’ என்று ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”ஆயுர்வேதத்தில் குடுச்சியானது புத்துணர்ச்சிக்கு சிறந்த மூலிகை என கூறப்படுகிறது. எந்தவித நச்சுப் பாதிப்பும் ஏற்படுவதில்லையென்று குடுச்சியின் சாறு தொடர்பான ஆய்வு அறிக்கையில் … Read more

NeoCov வைரஸ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலா?- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

ஜெனீவா: சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து குறிப்பிட்டுள்ள ‘நியோகோவ்’ என்ற வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள், கரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற வைரஸ் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை https://www.biorxiv.org/அறிவியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ‘வவ்வால்களிடம் நியோகோவ் என்ற கரோனா வைரஸ் காணப்படுகிறது. நியோகோவ் வைரஸில் ஒரு மரபணு … Read more

பிப்ரவரி 16: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,40,531 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது? – கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்

பெங்களூரு: ‘வளையல்கள் உள்ளிட்ட 100 அடையாளங்களை அணிந்துகொண்டு மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆனால், அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது?’ என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமிய … Read more

பிடிஎஸ் குழு குறித்து சர்ச்சை கருத்து: அமெரிக்க டிவி தொகுப்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு

நியூயார்க்: பிரபல பிடிஎஸ் இசைக் குழு குறித்து இன ரீதியாக அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த இசைக் குழுவான பிடிஎஸ், உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. இக்குழுவில் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும், காமெடி நடிகருமான ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் பேசும்போது, 90-களிலிருந்து அறிமுகமான பல்வேறு இசைக் குழுகளை பற்றி கூறிவிட்டு … Read more

இறுதிக்கட்ட பணியில் சீமை கருவேல மரங்களை அழிக்கும் திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பொதுத்தளத்தில் இதுகுறித்து வெளியிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்த … Read more