98 வயதில் 500-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்; புதிதாக பிறந்த கொள்ளுப் பேரக்குழந்தையை முதன்முறையாக சந்திக்கும் அதிர்ஷ்டசாலி பாட்டி!

அமெரிக்காவில் ஏற்கெனவே 500-க்கும்மேற்பட்ட பேரக்குழந்தைகளைக் கொண்ட ஒரு 98 வயது பெண், இப்போது புதிதாக பிறந்துள்ள தனது கொள்ளு பேத்தியை முதல் முறையாக பார்த்துள்ளார். 98 வயது அதிர்ஷ்டசாலி பாட்டி! பெரியோர்கள் பொதுவாக பேரன் பேத்தி பார்ப்பது அதிர்ஷடம் என்பார்கள், அனால் அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 98 வயதான ‘மேடெல்’ (MaeDell) என்று அழைக்கப்படும் கோர்டெலியா மே ஹாக்கின்ஸ் (Cordelia Mae Hawkins) என்ற பெண்ணுக்கு அந்த அதிர்ஷடம் 500 முறைகளுக்கு மேல் கிடைத்துள்ளது. சமீபத்தில் அவர் … Read more

கடற்கரையில் கவிழ்ந்த கடத்தல் படகுகள்: 8 உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் கடத்தல் படகு கவிழ்ந்ததில் 8 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்பு அதிகாரிகளுக்கு வந்த அவசர அழைப்பு  சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 11:30 மணியளவில் சான் டியாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளுக்கு பெண் ஒருவர் அவசர எண்ணை அழைத்து, 15 பேருடன் மக்கள் கடத்தல்காரர்கள் சிறிய மீன்பிடிக் கப்பலில் இருப்பதாகவும், அவர்கள் நகரின் வடக்கே பிளாக்ஸ் பீச்சிற்கு செல்வதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். Sky News இதையடுத்து பெண்ணின் ஜிபிஎஸ் ஆயத்தொலைவுகளைப் … Read more

'இந்தியாவுக்கு ஒத்து வராது' தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

‘இந்திய குடும்ப கட்டமைப்புக்கு ஒத்து வராது’ என கூறி உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணத்திற்கு (Same-Sex Marriage) மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஓரினச்சேர்க்கை மற்றும் ஒரே பாலின உறவை இந்திய குடும்பம் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுவை எதிர்த்து மத்திய அரசு … Read more

பக்முட்டில் தீவிரமடையும் போர்: கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை

கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்டில் நடைபெற்று வரும் போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னேறும் ரஷ்ய படைகள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், ரஷ்யா தனது தாக்குதல் திறனை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட் மீது ரஷ்ய படைகள் தங்கள் கவனத்தை குவித்து வருகின்றனர். Reuters நகரின் … Read more

பிஞ்சு மகளை துன்புறுத்திய நபர்: மான் கொம்பால் பழி தீர்த்த தந்தை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் காவல் நிலையம் சென்ற நபர், தம்மை கைது செய்ய வேண்டும் எனவும், தமது பிஞ்சு மகளை துன்புறுத்திய நபரை இறுதியில் பழி வாங்கியதாகவும் கூறியுள்ளார். உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம் பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவலில், லெவி ஆக்ஸ்டெல் என்ற நபரே காவல் நிலையம் சென்று தம்மை கைது செய்ய வலியுறுத்தியவர். உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம் காணப்பட்ட நிலையில் பொலிசார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். @getty பின்னர் முன்னெடுத்த விசாரணையில், … Read more

காதலனை சந்திக்க துபாயிலிருந்து வந்த விமான பணிப்பெண்; நள்ளிரவில் நான்காவது மாடியிலிருந்து..,

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து குதித்து விமான பணிப்பெண் உயிரிழந்தார். விமானப் பணிப்பெண் உயிரிழந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான விமானப் பணிப்பெண் அர்ச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து குதித்துள்ளார். தனது காதலனைச் சந்திப்பதற்காக துபாயிலிருந்து பெங்களூரு வந்த அர்ச்சனா, வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது. Twitter @ians_india கோரமங்களா வட்டாரத்தில் உள்ள ரேணுகா ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக … Read more

அபாரமாக ஆடிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள்: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி

 இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையிலுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக நடக்கும் இப்போட்டியில் இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார்கள். @cricbuzz முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 480 ஓட்டங்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (rohit sharma) அபாரமாக விளையாடி … Read more

15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்த போதைப் பொருள் விற்பனையாளர் கைது!

அமெரிக்காவில் வாகனம் நிறுத்துமிடத்தில் போதையிலிருந்த சிறுவனை துஷ்பிரோயகம் செய்ததற்காகப் போதைப் பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனை அமெரிக்காவிலுள்ள டன்கின் டோனட்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனை துஷ்பிரோயகம் செய்ய முயன்றதாக கூறி போதைப் பொருள் வியாபாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. @flickr டன்கின் டோனட்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் 15 வயது சிறுவனுக்குப் போதைப் பொருள் வழங்க ரோகர் கோக் (40) என்பவர் வந்துள்ளார். அப்போது இருவரும் வாகனத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். துஷ்பிரயோக … Read more

சொந்த மகனென தெரியாமல் தந்தை செய்த அதிர்ச்சியூட்டும் செயல்., பிரித்தானியாவில் அசாதாரண சம்பவம்

பிரித்தானியாவின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தில் நபர் ஒருவர் கத்தி முனையில் தவறுதலாக தனது சொந்த மகனிடம் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சொந்த மகனிடம் கொள்ளை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஒரு நபர் தனது சொந்த மகனை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த நபருக்கு அது அவரது சொந்த மகன் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவின் க்ரான்ஹில் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 45 வயது முகமூடி அணிந்த நபர் … Read more

பிரித்தானியாவின் பலம் மற்றும் பாதுகாப்பு இது! இருநாட்டு தலைவர்களை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியாவின் உலகளாவிய கூட்டணி பலம் மற்றும் பாதுகாப்பின் மிகப்பெரிய ஆதாரம் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான Aukus ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது குறித்து விவாதிக்க ரிஷி சுனக் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன் இந்த சந்திப்பில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேஸும் கலந்து கொள்கிறார். ஜோ பைடனுடன் இருவரும் இணைந்து நீர்மூழ்கி கப்பல் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளனர். நீர்மூழ்கி கப்பல் … Read more