இலங்கை நெருக்கடி தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகை லாஸ்லியா

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இலங்கை தமிழரும் பிக்பாஸ் புகழுமான நடிகை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், மிக மோசமான யுத்தத்தை … Read more

புதிய விவாகரத்துச் சட்டம்: நாளை முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வருகிறது

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய விவாகரத்துச் சட்டம் ஒன்று, நாளை முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டம் ‘no fault divorce’ என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதியர், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டவேண்டியதில்லை. தங்களுக்கு சேர்ந்து வாழ இஷ்டமில்லை என்றாலே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், தம்பதியரில் ஒருவர் மட்டுமே விவாகரத்துக்கு விண்ணப்பித்தாலே போதும். நாம் சமீப காலமாக விவாகரத்து தொடர்பில் வெளியான பல … Read more

புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்ப இருக்கும் பிரித்தானியா: இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவர்களை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்ப இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்க இருப்பதாகவும், அதற்காக, அந்நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பில், புலம்பெயர்வோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களது புகலிடக் கோரிக்கைகளை … Read more

புச்சா படுகொலை பிரித்தானியாவால் திட்டமிடப்பட்டு உக்ரைனால் அரங்கேற்றப்பட்டது! உக்ரேனிய எம்.பி பரபரப்பு தகவல்

உலகையே உலுக்கிய உக்ரைனின் புச்சாவில் இடம்பெற்ற படுகொலைகள், பிரித்தானியாவால் திட்டமிடப்பட்டு உக்ரைனால் அரங்கேற்றப்பட்டது என உக்ரேனிய எம்.பி. Ilya Kiva தெரிவித்துள்ளார். உக்ரைனின் புச்சா நகரில் உக்ரேனியர்கள் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் சாலையில் வரிசையாக கிடந்த காட்சி வீடியோவாக இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ரஷ்ய மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயாராகி உள்ளன. இந்நிலையில், உக்ரைன் எம்.பி. Ilya Kiva வெளியிட்ட வீடியோவில், புச்சாவில் நடந்தது பிரித்தானியா MI6 … Read more

கேரளாவில் திருமணமான 20 நாளில் செல்பி மோகத்தால் உயிரிழந்த புதுமாப்பிள்ளை! மனைவியின் பரிதாப நிலை

இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி பகுதி அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏரிக்கு முன்னால் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது திடீரென தண்ணீருக்குள் தவறி விழுந்தனர். மிக ஆழமான நீர் நிலை இருவரும் மூழ்கினர், அவர்களின் சத்தம் கேட்டு கிராம … Read more

இது முடியாது? நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நாமல் ராஜபக்ஷ

ஜனநாயகத்தை மீறி அரசாகங்களை மாற்ற முடியாது என நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோட்டாபய பதவி விலக வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், அவசர நிலை … Read more

பெண்களே இனி நாப்கின்ஸ் வேண்டாம்; மென்சுரல் கப் போதும்… இப்படி பயன்படுத்துங்க

பொதுவாக மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன. துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக்கூடியவை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பலரும் மென்சுரல் கப் பயன்படுத்தி வருகின்றார்கள். இது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது. கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் … Read more

ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படும் பிரித்தானியர்… காரணம்?

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளார். பெர்லினிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றியவர் David Smith (57). அவர், ரஷ்ய உளவாளிகளுக்கு பிரித்தானிய அதிகாரிகளின் பெயர்கள் முதலான சில தகவல்களைக் கொடுத்து, அதற்கு பதிலாக பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆகத்து மாதம் அவர் கைது செய்யப்பட்டார். பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அங்கு ரஷ்ய கொடி, சோவியத் இராணுவ தொப்பிகள் மற்றும் இராணுவ வரலாறு … Read more

சடலங்களையும் விட்டுவைக்காத கொடூரம்: அம்பலமான ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம்

உக்ரைன் தலைநகர் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷ்ய துருப்புகள், உக்ரேனிய மக்களின் சடலங்களில் வெடிகுண்டை புதைத்துவிட்டு போயுள்ளது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்தலாம் என ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், மிக அருகாமையில் வைத்தே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதும், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள காட்டுமிராண்டித்தனம் தற்போது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக … Read more