என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தில் இருந்தேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து வந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ நேர்காணலில் தெரிவித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கத்தாரில் நடந்த உலகக்கோப்பைக்கு பின் தனது சர்வதேச கால்பந்து வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த அவர், சவுதியின் கிளப் அணியான அல்-நஸர் கிளப் அணிக்கு மாறினார். தற்போது யூரோ 2024 தகுதிச்சுற்று போட்டிகளுக்காக … Read more

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரலையில் வாசித்த பெண் நிருபர்..ஓடி வந்து கட்டியணைத்த மகன்..நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பெண் நிருபர் நேரலையில் வாசித்தபோது, அவரது மகன் ஓடி வந்து கட்டியணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் கொலோரடோவில் உள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகிகள் இருவரை மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த மாணவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் கைத்துப்பாக்கியை மீட்டனர். இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் அங்கு சம்பவத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். அப்போது … Read more

வெளியேற வேண்டிய நேரம் இது! உலகக்கோப்பையை வென்ற ஜேர்மனி வீரர் 34 வயதில் ஓய்வு அறிவிப்பு

ஜேர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் 34 வயதில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் உலகக்கோப்பை 2014ஆம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பையை வென்ற ஜேர்மனி அணியில் முக்கிய பங்கு வகித்தவர் மெசுட் ஓசில். அந்த தொடரில் அல்ஜீரியா அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்த ஓசில், ஏனைய போட்டிகளில் சக அணி வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்தார். துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட ஓசில், ஜேர்மனி அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் … Read more

பச்சை குத்துவதால் எதாவது நன்மைகள் உள்ளதா?

பச்சை குத்தல்கள் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை குறிப்பதாக இருக்கும்.   அது அவர்களின் கடந்த கால நிகழ்வு, அனுபவம் அல்லது உணர்ச்சி அல்லது ஊக்கமளிக்கும் செய்தியை அடையாளப்படுத்தினாலும், அது அவர்களுக்கு நம்பிக்கை, உத்வேகம் மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக சிலர் நம்புகின்றனர்.   பச்சை குத்துவதால் சேதம் ஏற்படுமா? பச்சை குத்திக்கொள்வதில் பயன்படுத்தப்படும் மைகள் பெரும்பாலும் கன உலோகங்களிலிருந்து பெறப்பட்ட நிறமிகளைக் கொண்டிருக்கின்றன. இந்த நச்சுகள் புற்றுநோய், DNA சேதம், வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அத்தோடு பலவீனமான … Read more

இது பயங்கரமான, அருவருப்பான விடயம்! கனேடிய பிரதமர் ட்ரூடோ

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்திற்கு உகாண்டாவில் ஒப்புதல் அளித்துள்ளதற்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். LGBTQ+ க்கு எதிரான சட்டம் உகாண்டா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சில சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சில குற்றங்களுக்கு மரண தண்டனை மற்றும் LGBTQ+ என அடையாளம் காண்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. @Reuters அந்நாட்டின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசுமான் பசலிர்வா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதா 2023ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். @Abubaker … Read more

உலக கோப்பையில் தவறவிட்ட சாதனையை முறியடிக்க போகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் அணியுடன் களமிறங்குவதன் மூலம் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டி விளையாடி வீரராக சாதனை படைக்கவுள்ளார். உலக கோப்பையில் தவறவிட்ட சாதனை கத்தார் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதிச் சுற்றில் போர்த்துகல் அணி வெளியேறியது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் சர்வதேச அளவில் அதிக போட்டிகள் ஆடிய கால் பந்து வீரர் என்ற சாதனையை முறியடித்திருப்பார். @afp தற்போது நடக்கவுள்ள Euro 2024 கால்பந்து போட்டியில் ரொனால்டோ(cristiano … Read more

லண்டனில் பொலிஸ் துரத்தியதில் பரிதாபமாக பலியான நபர்: முதல் முறையாக வெளியான புகைப்படம்

கிழக்கு லண்டனில் பொலிஸ் துரத்தலைத் தொடர்ந்து பரிதாபமாக பலியான நபரின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்களை முதல் முறையாக அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளது. விபத்து காரணமாக மரணம் பொலிசார் துரத்திய நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தண்டவாளங்களில் மோதி விபத்து ஏற்பட்டதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது பெயர் ஆலமின் காசி என்று குறிப்பிட்டுள்ள பொலிசார், அவருடன் பயணித்த இன்னொருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், மருத்துவமனை சிகிச்சையில் அவர் குணம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். மனைவி மற்றும் பிறந்து … Read more

உக்ரேனிய குடியிருப்புகளை கொடூரமாக தாக்கிய ரஷ்யா ஏவுகணை! பற்றி எரியும் கட்டிடங்கள்..அதிபயங்கர காட்சியை பகிர்ந்த ஜெலென்ஸ்கி

உக்ரைனின் Zaporizhzhia நகரை ரஷ்ய ஏவுகணை தாக்கிய வீடியோவை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிர்ந்துள்ளார். கீவ் மீது தாக்குதல் உக்ரைன் தலைநகர் கீவுக்கு தெற்கே உள்ள பாடசாலை மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் Zaporizhzhia நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரண மக்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் இறந்ததாக … Read more

பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா! சோகத்தில் ரசிகர்கள்

சென்னையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. கடைசி ஒருநாள் போட்டி இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா, 49 ஓவரில் 269 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்ஷ் 47 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 38 ஓட்டங்களும், ஹெட் 33 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் … Read more

குளிர்பான பெட்டியை திருடிய ராட்ஷச முதலை! உறைந்து போன சுற்றுலா பயணிகள்: வீடியோ

சமீபத்தில் முதலை ஒன்று சுற்றுலா வந்த நபர்களிடம் இருந்து உணவு மற்றும் குளிர்பான பெட்டியை திருடிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதலையின் வைரல் வீடியோ பொதுவாக சுற்றுலா பயணிகளிடம் இருக்கும் பொருட்களை குரங்குகள், பறவைகள், சில சமயங்களில் குதிரைகள் கூட லாபகமாக திருடிச் செல்வதை பல்வேறு சமூக வலைதள வீடியோவில் பார்த்து இருப்போம். ஆனால் தற்போது முதலை ஒன்று சுற்றுலா பயணிகளுடைய உணவு பொருட்களை திருடிச் செல்வதை சமூக வலைதள வீடியோ ஒன்று … Read more