மக்கள் எதிரி அல்ல…இதை பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது! சங்கக்கார அறிக்கை

 மக்கள் எதிரி அல்ல என்று என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடி குறித்து சங்கக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையர்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். மக்கள் மற்றும் குடும்பங்கள் நாளுக்கு நாள் விரக்தியுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கடினமாகி வருகிறது. தேவையான தீர்வை கேட்டு மக்கள் போராடி வருகின்றனர். ரஷ்யாவை தடுக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்த தயார்! … Read more

சாலை முழுவதும் எரிந்த சடலங்கள், இராணுவ டாங்கிகள்: பகீர் கிளப்பும் உக்ரைன் நகரம்

உக்ரைனின் புச்சா நகரமானது தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவுகளுக்கு கல்லறையாக அமைந்ததாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில், ரஷ்ய துருப்புகள் புச்சா நகரை சின்னா பின்னமாக்கியுள்ளது. பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள் புச்சா வழியாகவே நுழைந்துள்ளதாகவும், பதிலடியாக, உக்ரைன் துருப்புகள் ரஷ்ய இராணுவ டாங்கிகள் அணிவகுப்பை மொத்தமாக சிதைத்தது. இதனாலையே, கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டம் சுக்கலானது. இந்த நிலையில், புச்சா நகரில் இருந்து கடைசி ரஷ்ய … Read more

ரஷ்யாவை தடுக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்த தயார்! பிரபல ஐரோப்பிய நாடு அதிரடி

ரஷ்யா ஆக்கிரமிப்பை தடுக்க தங்கள் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த தயாராக இருப்பதாக பிரபல ஐரோப்பிய நாடும் நேட்டோ உறுப்பினர் நாடான போலந்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது 39வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள மேற்கத்திய நாடுகள், உக்ரைன் அதன் பிராந்தியத்தை பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளன. ஒரு பக்கம் இரு நாடுகளிடையே … Read more

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரபல நாட்டில் இலங்கையர்கள் மாபெரும் போராட்டம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இதனிடையே, ஏப்ரல் 2 மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை ஏப்ரல் 4 அதிகாலை … Read more

விளாடிமிர் புடினுக்கு வேட்டு வைக்கும் திட்டம்: நெருங்கிய வட்டாரத்தில் இரகசிய கூட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்தும் அகற்றும் திட்டத்திற்கு, அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்தே இரகசிய கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்து அகற்றுவதாக அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வாதிகாரம் கொண்ட புடினை அகற்றுவதற்காகவே உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தூண்டிவிட்டதாகவும், இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் ரஷ்யாவை விளாடிமிர் புடினிடம் இருந்து கைப்பற்ற வாய்ப்பாக அமையும் எனவும் புலனாய்வு ஆய்வாளர்கள் சிலர் … Read more

பிரித்தானிய எண்ணெய் கிணறுகள் மேல் குவிந்த போராட்டக்காரர்கள்: அதிரடி கைது நடவடிக்கை!

பிரித்தானியாவில் எண்ணெய் கிணறுகளை 48 மணிநேரங்களாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த போராட்டக்காரர்களில் 83 நபர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Extinction Rebellion மற்றும் Just Stop Oil என்ற ஆர்வலர்கள் குழுக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் டிகார்பனைசேஷன் முயற்சிகளை அரசாங்கம் துரிதப் படுத்தக்கோரி பிரித்தானியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் குதித்தனர். இதில் சில போராட்டக்காரர்கள் எண்ணெய் கிணறுகள் மீது ஏறி போராட்டம் நடத்தவே அந்த பகுதியில் … Read more

நம்பமுடியாத வகையில் அடி கொடுத்த உக்ரைன்! 18000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 39-வது நாளாக தொடர்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் தங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: உக்ரைனில் ஆடையில்லாத 5 பெண்களின் உடல்களை சாலையில் எரிக்க முயன்ற ரஷ்ய வீரர்கள்! பதறவைக்கும் தகவல் போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 18,000 ரஷ்ய … Read more

ஐபிஎல்! ஸ்டெம்பை கால்களால் தட்டிவிட்ட விஜய் சங்கர்! மண்டையை குழப்பிய ரன் அவுட் வீடியோ

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் வீரர் விஜய் சங்கர் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் பாண்ட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தமிழத்தை சேர்ந்த விஜய் சங்கர் பந்துவீசினார். பந்தானது பீல்டர் அபினவ் மனோகரிடம் சென்றது. எதிர் திசையில் இருந்த லலித் யாதவ் ஓடி வர அபினவ், பந்தை … Read more

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்! வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் சமூகவலைதளங்கள் முடக்கம்! வெளியான முக்கிய தகவல் இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டுவிட்டர், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை. அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். மேலும், இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்க … Read more

உக்ரைனில் ஆடையில்லாத 5 பெண்களின் உடல்களை சாலையில் எரிக்க முயன்ற ரஷ்ய வீரர்கள்! பதறவைக்கும் தகவல்

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிர்வாண நிலையில் இருந்த 5 பெண்களின் உடல்களை எரிக்க ரஷ்ய படைகள் முயன்றுள்ளது. இந்த பதறவைக்கும் தகவலை உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்  உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 39-வது நாளாக தொடர்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகிலுள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றி உள்ளோம் என துணை பாதுகாப்பு மந்திரி … Read more