உக்ரைன்-ரஷ்யா மோதல்: போர்க்குற்றங்களை விசாரிக்க மனித உரிமை நிபுணர்கள் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமையன்று உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றங்களை விசாரிக்க மூன்று மனித உரிமை நிபுணர்களை நியமித்துள்ளது. உக்ரைனில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சு குற்றச்சாட்டுகளை ரஷ்யா எதிர்கொள்கிறது. ரஷ்ய ஆயுதப் படைகள் ஷெல் வீச்சு மற்றும் நகரங்களை முற்றுகையிட்டு பொதுமக்களைக் கொன்றதாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன, குறிப்பாக தெற்கு துறைமுகமான மரியுபோலில் பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. மறுபுறம், கைப்பற்றப்பட்ட ரஷ்ய … Read more

பந்துவீச்சில் டஃப் கொடுத்த கொல்கத்தா; போராடி வென்றது பெங்களூரு!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது சீசனில், 6-வது லீக் ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் … Read more

நீங்க அதிகமா பால் குடிப்பீங்களா?

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பால் உட்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் பால் அதிகமாக குடிப்பதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இங்கே … Read more

உக்ரைனில் ரஷ்ய வீரர்களால் ஏற்றப்பட்ட ரஷ்ய கொடியை கிழித்த உக்ரேனியர்! வைரல் வீடியோ

 உக்ரைனில் ரஷ்ய வீரர்களால் ஏற்றப்பட்ட ரஷ்ய கொடியை உக்ரேனியர் ஒருவர் கிழித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 35வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. எனினும், மரியுபோல், கெர்சன் மற்றும் கார்கிவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் BalaKleya பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது ஏற்றப்பட்டிருந்த ரஷ்ய தேசிய கொடியை உக்ரேனியர் ஒருவர் கிழித்துள்ளார். குறித்த … Read more

ஹசரங்கா சுழலில் சின்னாபின்னமான கொல்கத்தா; 128 ஓட்டங்களில் ஆல்-அவுட்!

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 128 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் துடுப்பாட களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே … Read more

உடனே இந்த நாடுகளிலிருந்து வெளியேறுங்கள்… குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

 உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே அந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் ரஷ்ய அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க குடிமக்களை தனிமைப்படுத்தி தடுத்து வைக்கலாம் என்ற புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளுடன், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு மீண்டும் புதிய பயண ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யா ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி அல்லது ரஷ்யா அல்லது பெலாரஸ் வழியாக சாலை மார்க்கமாக வெளியேறும் போது, உக்ரைனில் உள்ள ரஷ்ய … Read more

வெளியேறுகிறதா ரஷ்ய துருப்புகள்? நிலைமையை வெளிப்படுத்திய உக்ரைன்

 கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதலை நிறுத்துவோம் என ரஷ்ய அறிவித்திருந்த நிலையில் உண்மை நிலையை உக்ரைன் வெளிப்படுத்தியுள்ளது. நேற்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்-ரஷ்யா பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, உக்ரைனின் கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதலை நிறுத்துவோம் என ரஷ்ய தரப்பில் அறிவிக்கப்பட்டது. உக்ரேனியர்களுக்கு உதவிய ரஷ்ய வீரர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்  ஆனால், நேற்று இரவு கீவ் புறநகரில் மற்றும் Chernihiv-ல் தொடர்ந்து ரஷ்ய படைகள் குண்டு போட்டு தாக்குதல் … Read more

உக்ரேனியர்களுக்கு உதவிய ரஷ்ய வீரர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்

 ரஷ்ய வீரர்கள் உக்ரேனியர்களுக்கு உதவிய வீடியோ காட்சிகளை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கெர்சனில் உள்ள மக்களுக்கே ரஷ்ய வீரர்கள் உணவுப்பொருட்கள் அளித்து உதவியுள்ளனர். உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களில் கெர்சன் நகரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டதாவது, கெரச்ன் பிராந்திய நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே உள்ள சதுக்கத்தில் அந்நகர வாசிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ரஷ்ய வீரர்கள் ஏற்பாடு செய்தனர். கெர்சன் நகரில் … Read more

நாம சாகப் போகிறோமா? ரஷ்யர்களால் விஷம் அளிக்கப்பட்ட கோடீஸ்வரர் கேட்ட கேள்வி

உக்ரைனுக்கு ஆதரவாக சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ரஷ்ய கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிக் தமக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய கால்பந்து அணியான செல்சியின் உரிமையாளரும் ரஷ்ய கோடீஸ்வரருமான ரோமன் அப்ரமோவிக் கடந்த மாதம் ரஷ்ய உளவாளிகளால் விஷம் அளிக்கப்பட்டு, உயிர் தப்பியுள்ளார். அவருக்கு முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட கொடிய விஷம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல மணி நேரம் கண் பார்வை இழந்து, அவரது கைகள் மற்றும் முகத்தில் தோல் உரிக்கப்பட்டது போன்ற … Read more

நாளை நடக்கப்போகும் சுக்ர பெயர்ச்சி! இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு ஏற்பட போகும் காலமாம்! நாளைய ராசிப்பலன்

மார்ச் 31, 2022 அன்று கும்ப ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார். இந்த கிரகப் பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளார்.  2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி காலை 8.54 மணிக்குப் பெயர்ச்சியாகி ஏப்ரல் 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மீன ராசியில் இருக்கும் சுக்கிரன் அடுத்த ராசிக்கு மாறுகிறார்.  நாளை நடக்கப்போகும் இந்த கிரப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு ஏற்பட போகுதாம். தற்போது அந்த ராசியினர் யார் … Read more