ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் டி20 ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தனது தொடக்க ஆட்டத்தை இழந்ததை அடுத்து, புதிய சீசனில் ஓவர்-ரேட் பெனால்டியைப் பெற்ற முதல் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியிலும் தோல்வியடைந்து அபராதமும் கட்டுவதும் ரோஹித் ஷர்மாவுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் ஆனது. ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து … Read more

உக்ரைனில் பயங்கரமான கூலிப்படையை களமிறக்கும் ரஷ்யா! பிரித்தானியா தகவல்

ரஷ்யா தனது தனியார் இராணுவ நிறுவனத்தை கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு தனது கூலிப்படையை கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யாவின் பின்னடைவைத் தொடர்ந்து, அமைப்பின் மூத்த தலைவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் அதன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர் என்று பெயர் பெற்ற … Read more

உக்ரைன் போருக்கு செல்ல தடை! குடிமக்களை எச்சரிக்கும் 7 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனில் சண்டையிட வேண்டாம் என்று தங்கள் குடிமக்களை வலியுறுத்துகின்றன. ரஷ்ய படையினரை எதிர்த்து போராடிவரும் உக்ரேனிய போராளிகள் கூட்டத்தில் சேருவதைத் தவிர்க்குமாறு ஏழு ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள் தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் நீதி அமைச்சர்களால் இந்த முறையீடு செய்யப்பட்டது. ஏழு நாடுகளின் அமைச்சர்கள் திங்கள்கிழமை (மார்ச் 28) பிரஸ்ஸல்ஸில் அவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், … Read more

கீறல் விழுந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா?

உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் இருந்து உங்கள் கைகளை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு சிறிய கீறல் மொபைல் போன் ஸ்க்ரீனில் இருந்தால் கூட அதனை பெரிதுபடுத்தாமல் பயன்படுத்துபவர்களுக்கு சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உதாரணமாக ஒரு மலேசிய நபர் ஸ்க்ரீன் பாதிக்கப்பட்ட மொபைல் போனை பயன்படுத்தியதால் அவருடைய விரல் மற்றும் உள்ளங்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த மொபைல் ஸ்க்ரீனில் உள்ள கண்ணுக்கு தெரியாத சில துகள்கள் அவருடைய கைகளை பாதித்துள்ளது. அதே போல 23 … Read more

கடலில் மிதந்துவரும் உக்ரைன் கண்ணிவெடிகள்! கருங்கடலில் கப்பகளுக்கு ஆபத்து..,

துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஒரு கடல் கண்ணிவெடியை இராணுவ டைவிங் குழு திங்கள்கிழமை செயலிழக்கச் செய்தது. உக்ரைனில் போருக்கு மத்தியில் சில நாட்களில் அப்பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்ட இரண்டாவது கடல் கண்ணிவெடி இது என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்கேரியா கரைக்கு அப்பால், கண்டெடுக்கப்பட்ட அந்தக் கண்ணி வெடியை நிபுணர் குழு செயலிழக்கவைத்தது. ரஷ்யத் துருப்பினருக்கு எதிராகக் கடற்பகுதிகளில் உக்ரேன் பொருத்தி வைத்துள்ள பழைய கண்ணிவெடிகளில் சில அறுந்து கடலில் மிதப்பதாக ஒருவாரத்துக்கு முன்னர் … Read more

லக்னோவை மிரட்டிய திவாட்டியா! கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 15-வது சீசனின் நான்காவது ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 … Read more

ஏப்ரல் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை வரை, 2022 ஏப்ரலில் பல மாற்றங்கள் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்… மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் ஏப்ரல் 1 முதல், சுவிட்சர்லாந்தில் மீதமிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட இருப்பதாக (எதிர்பார்த்தபடி, பெருந்தொற்றுச் சூழலில் முன்னேற்றம் காணப்படும் நிலையில்) பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன் பொருள் என்னவென்றால், பொதுப்போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகள் முதலான இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிதல் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டால் … Read more

முதல் மூன்று ஓவர்களில் லக்னோவை தட்டிவைத்த ஷமி! மிரட்டிச்சென்ற ஹூடா, பதோனி..

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வரும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 158 ஓட்டங்கள் குவித்துள்ளது. முந்தைய சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவருக்கு இதுவே முதல் போட்டியாகும். கடந்த சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ராகுல் இப்போது லக்னோ அணியை வழிநடத்துகிறார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளுமே, ஐபிஎல் களத்துக்கு புதிதானவை … Read more

புடின் மற்றும் ஜெலென்ஸ்கி சந்தித்தால்… முடிவு இதுதான்: ரஷ்ய அமைச்சர் அதிரடி

ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு கண்டிப்பாக எதிர்மறையாக அமையும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து ஒரு மாதமாக தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரை நிறுத்துவது தொடர்பான நான்காவது கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திங்கள்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தொலைக்காட்சிக்கு அளித்த … Read more

மேக்ஸ்வெல், வினி ராமன் திருமணம்: வைரலாகும் தமிழ் பாரம்பரிய திருமண சடங்கு வீடியோ காட்சிகள்!

பிரபல அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமன் இருவருக்கும் தமிழ்நாட்டு பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமண சடங்குகள் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. பிரபல அவுஸ்திரேலிய வீரரும் தற்போதைய ஐபிஎல்-லில் பெங்களூரு அணியின் அதிரடி வீரரும் ஆன மேக்ஸ்வெல் தமிழ் சம்சாவளி பெண்ணான வினி ராமனை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் இருவரும் சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த … Read more