சத்துக்களை அள்ளித்தரும் முட்டைக்கோஸ் ஜூஸ்! எப்படி சாப்பிட வேண்டும்?

பச்சைநிறக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் அதிகம் அடங்கியுள்ளன. முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது, அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.  இதனை கொண்டு ஜூஸ் தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் – 50 கிராம்மிளகு – 10தண்ணீர் – 1 … Read more

உக்ரைனில் கூலிப்படைகளை களமிறக்கும் ரஷ்யா: ஒப்புதலளித்த புடின்

உக்ரைனில் வெளிநாட்டு கூலிப்படைகளை களமிறக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனில் போரிட்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்குள் போரை முடித்துக்கொள்ள திட்டமிட்ட புடினின் கனவு துணிச்சல் மிகுந்த உக்ரேனிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே உக்ரைனுக்குள் கூலிப்படைகளை களமிறக்க விளாடிமிர் புடின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், குறித்த கூலிப்படையை தன்னார்வலர்கள் என்றே புடின் அடையாளப்படுத்தி வருகிறார். பெரும்பாலும் மத்தியக்கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களே … Read more

கோபத்திற்கு ஆளாகாதீர்… ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இமானுவல் மேக்ரான்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். ரஷ்யாவின் மிருகத்தனமான நடவடிக்கை தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேக்ரான், மேலும் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். போர் சூழல் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக … Read more

புடின் முன்னெடுத்த சந்திப்பு: உக்ரைன் மீது படையெடுக்கும் மேலும் ஒரு நாடு

ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என அறியப்படும் Alexander Lukashenko-ஐ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்தித்துள்ள நிலையில், உக்ரைன் மீது பெலாரஸ் படையெடுக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. பெலாரஸ் நாட்டுக்கு சொந்தமான போர் விமானங்கள் உக்ரைன் எல்லையில் தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, இந்த அச்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் திட்டத்தின்படியே பெலாரஸ் போர் விமானங்களை அனுப்பி எல்லையில் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆத்திரமூட்டலின் நோக்கம் பெலாரஸின் தற்போதைய தலைமையை உக்ரேனுக்கு எதிரான … Read more

நோயாளிகளின் படுக்கை அருகே குவியல் குவியலாக சடலங்கள்: வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி

ஹொங்ஹொங் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளின் படுக்கை அருகாமையில் குவியல் குவியலாக சடலங்கள் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹொங்ஹொங்கில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் குறித்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் நோயாளிகள் கடுமையாக அவதிப்படும் சூழலில், அவர்களின் படுக்கை அருகாமையில் சடலங்களை குவித்து வைத்திருப்பது, அந்த நோயாளிகளின் மன நிலையை பாதிக்க செய்யும் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது. ஹொங்ஹொங்கில் திடீரென்று கொரோனா பாதிப்பு … Read more

ஊருக்கு திரும்பினால்… உக்ரைனில் சிக்கிய ரஷ்ய வீரர்கள் வெளியிட்ட நடுக்கும் தகவல்

போருக்கு பின்னர் ஊரு திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படலாம் என உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் சிலர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்துள்ளனர். அப்போதே அந்த இராணுவ வீரர், ரஷ்யாவுக்கு திரும்பினால் கட்டாயம் கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட நாள் முதல், தாங்கள் இறந்துள்ளதாகவே கருதப்படுவதாகவும், சமீபத்தில் பெற்றோரை தொடர்புகொள்ள வாய்ப்பமைந்த போது, இறுதிச்சடங்குகளுக்கான அனைத்தும் தயார் நிலையில் … Read more

அப்பாவி உக்ரேனிய பெண்மணிக்கு ரஷ்ய துருப்புகளால் ஏற்பட்ட கொடூரம்: வெளியான புகைப்படம்

தனது தாயாருக்காக மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி ஒருவர் ரஷ்ய டாங்கியால் சுடப்பட்டு மொத்தமாக உடல் சிதறி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகரில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிவருபவர் 31 வயதான Valeriia Maksetska. இவரே ரஷ்ய துருப்புகளால் டாங்கியால் சுடப்பட்டு, உடல் சிதறி பலியானவர். இவருடன், அவரது தாயாரும் சாரதியும் குறித்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவ் அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஷ்ய படையெடுப்புக்கு … Read more

பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராகும் விளாடிமிர் புடின்… வெளியான பகீர் தகவல்

உக்ரைனில் Chernobyl அணுமின் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதலை ஏற்படுத்தி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்க புடின் தயாராகி வருவதாக உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் படையெடுப்புக்கு பெரும்பாலான உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் படையெடுப்பானது தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டால், அணுஆயுதங்களை பயன்படுத்தி, உலக நாடுகளை அச்சுறுத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உக்ரைன் … Read more

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி மரணம்

இந்தியாவில் காஷ்மீர், குரேஸ் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டரில் உள்ள குஜ்ரன் நல்லா அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மிக அருகில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பைலட் கொல்லப்பட்டார் மற்றும் துணை விமானி காயமடைந்தார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் நோய்வாய்ப்பட்ட BSF வீரர்களை அழைத்துச் செல்வதற்காக சென்று கொண்டிருந்தது என்று அதிகாரிகள் … Read more

நெருக்கடியான சூழலில் ஜேர்மனி! மக்களை எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்

ஜேர்மனியில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்துவருவதால் நாடு நெருக்கடியான சூழலில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ஏச்சரித்துள்ளார். ஜேர்மனியில் கடந்த மாதம் COVID-19 தொற்று எண்ணிக்கை குறைந்துவிட்டன, ஆனால் சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இப்போது தொடர்ந்து ஒன்பது நாட்களாக தொற்று விகிதம் அதிகரித்து வருவதாகக் காட்டுகின்றன. BA.2 என அழைக்கப்படும் Omicron வகை கொரோனா வைரஸ் இன்னும் அதிகமாக பரவிவருவதாகவும், இந்த வாரத்தில் ஜேர்மனியில் பதிவான பாதி எண்ணிக்கை இந்த வகை வைரஸ் தான் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த … Read more