நாங்கள் காக்கா கூட்டமா? அதிமுக-பாஜக இடையே மீண்டும் வெடித்தது கருத்து மோதல்

சென்னை: முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று விமர்சித்தார்.  “பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும்.சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால் … Read more

உ.பி தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 8 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதசே மாநிலம் ஹாபூரில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயில் தடுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படியுங்கள்.. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்

சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்த நலையில் டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையும் படியுங்கள்.. காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி- நக்மா விரைவில் கட்சி மாறுகிறார்

சோனியா கொடுத்த பதவியை குலாம்நபி ஆசாத் ஏற்க மறுப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் தலைமையில் பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் குலாம்நபி ஆசாத் உள்பட அதிருப்தியாளர்கள் யாருக்கும் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கவில்லை. இதனால் சோனியா-ராகுல் மீது அதிருப்தியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். அதிருப்தியாளர்களில் சிலர் பா.ஜனதாவுக்கு தாவ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து குலாம்நபி … Read more

கனமழைக்கு வாய்ப்புள்ள 13 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

மண் காப்போம் இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்- ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2-வது இந்திய மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது. இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அவர்களை சத்குரு நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜஸ்தான் முதல்வர், “மண் நம்முடைய தாய். மண்ணை நாம் எப்போதுமே அன்பாகவும், மரியாதையாகவும் … Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு- முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். … Read more

உத்தரபிரதேசத்தில் குரங்கு அம்மை அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதி

காசியாபாத்: கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய இந்த நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 5 வயது சிறுமி க்கு திடீரென உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்த அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படடு … Read more

புதுவை இளைஞர்கள் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு- அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுவை அரசும், பிரெஞ்சு அரசும் இணைந்து தொழில் முனைவோர் மாநாட்டை அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தியது. இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது. மாநாட்டில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த 28 நிறுவனங்களும், 58 பிரெஞ்சு இந்திய கூட்டு நிறுவனங்களும் என மொத்தம் 86 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநாட்டில் புதுவையில் தொழில் தொடங்குவதற்கான சூழல், கட்டமைப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாடு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:- … Read more

தன்னை தானே திருமணம் செய்யும் பெண்- பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

சூரத்: குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் வருகிற 11-ந்தேதி தனக்குதானே திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற திருமணங்களைபோல மந்திரங்கள் ஓத வழக்கமான சடங்குகளுடன் இந்த திருமணத்தை அங்குள்ள ஹரி ஹரேஷ்வர் கோவிலில் நடத்தபோவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இந்த திருமணத்துக்கு பெற்றோர் குறுக்கே நிற்கவில்லை. அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணத்திற்காக அவர் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் … Read more