நான் முதல்வன் திட்டம் : முதல்வருக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

சென்னை முதல்வர் மு க ஸ்டாலினை அவரது நான் முதல்வன் திட்டத்துக்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம். அதில் உயர்கல்வியை நோக்கிய ஒரு பயணத்திட்டமான நான் முதல்வன் திட்ட போட்டி தேர்வுகள் பிரிவு மூலம் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அவர்கள் அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ள செய்தியறிந்து … Read more

நான் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் : பிரியங்கா காந்தி

டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அபகரிக்க முயன்றதாக பா.ஜனதா சொல்கிறது. அந்த சொத்துகளை யாரும் விற்க முடியாது, வாரிசுகளுக்கும் மாற்ற முடியாது. அவை அவர்களின் பெயரிலேயே இல்லை. பிறகு எப்படி அபகரிப்பு என்று சொல்ல முடியும்? எல்லாம் கட்டுக்கதை. பிரதமர் மோடிக்கு … Read more

நடிகைக்கு தொல்லை அளித்த்தாக முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

அமராவதி ந்டிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி நரேந்திரகுமார் ஜெத்வானி, மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது கொடுத்தா புகாரில் ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒரு தொழில் அதிபர் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதுடன், விசாரணை என்ற பெயரில் முறையான விசாரணையின்றி தன்னை கைது செய்து தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறி இருந்தார். நடிகையின் புகார் குறித்து ஆந்திர சி.ஐ.டி. போலீசார் விசாரணை … Read more

திருமண வாழ்க்கை குறித்து நடிகர் சிம்பு

சென்னை நடிகர் சிம்பு திருமண வாழ்க்கை குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.’ முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்திற்கான புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ‘தக் லைப்’ படம் தொடர்பாக சமீபத்தில் நடந்த … Read more

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை’ ஜம்மு காஷ்மீர்  பயங்கர வாத தாக்குதலையொட்டி தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள … Read more

ஆளுநர் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல்

சென்னை ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல்  அளித்துள்ளார்/ தமிழக ஆளுநர் 10 சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்ரம் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.  உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி அரசியல் கட்சிகளிடையே கடும் விவாதம்  நடைபெற்று வருகிற்து இன்று, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் எனத் தகவல்கல் வந்துள்ளன, அதன்படி, தமிழக சட்டசபையில் … Read more

சென்னையில் மீண்டும் கொரோனா : மூவர் பாதிப்பு

சென்னை சென்னையில்  3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள போதிலும் கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதன்படி காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று, தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையைச் சேர்ந்த, 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. … Read more

விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி நீக்கம் கோரி தீர்மானம்

சென்னை இன்று சென்னையில் நடந்த விசிக  மாவட்ட செயலாளர்கள் கூட்டட்த்ஹில் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது/ இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர்  iதிருமாவளவன் தலைமையில் சென்னை அசோக்நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்/ அப்போது திருமாவளவன்,- “ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்.  உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து … Read more

உச்சபட்ச அதிகாரம் நாடளுமன்றத்துக்கே : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

டெல்லி துணை ஜனாதிபதி ஜெகதீப்  தன்கர் நாடாளுமன்றத்துக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாககூறி உள்ளார்/ . இன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் , “நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை: இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம்  இரு விதமான கருத்துக்களை கூறுகிறது. நமது மவுனம் … Read more

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் பலி பலர் காயம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர். தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய … Read more