திடீர் நெஞ்சு வலியால் மேற்கு வங்க  ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா திடீர் நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்கு வங்காள மாநில ஆளுநராக சிவி ஆனந்த் போஸ்  பதவி வகித்து வருகிறார்.0 இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது., உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மருத்துவர்கள் உரிய பரிசோதனைகளுக்கு பின்னர், அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆளுநரின் உடல்நிலை பற்றிய தகவலறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக … Read more

தமிழகத்தில் வரும்  27 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்/ அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 21-04-2025 மற்றும் 22-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் அனுமதி

இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் அனுமதி அளித்ததுடன், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலும் கூட அந்த மசோதாக்கள் மீது 3 மாதத்தில் முடிவெடுக்க … Read more

மறக்கப்படுவதற்கான உரிமை – இணைய யுகத்தில் ஒரு மனித உரிமை தேவை! சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா

மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்:  நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத் தகவல் பரவலுடன் தனிநபரின் தனிமை, மரியாதை, மற்றும் புதிய வாழ்க்கையை தொடங்கும் உரிமை பற்றிய கவலைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில் “மறக்கப்படுவதற்கான உரிமை” (Right to be Forgotten) என்பது மனித உரிமை களில் ஒன்றாக கருதப்பட வேண்டியதாகவும், இலங்கையிலும் இது குறித்து சட்டரீதியாக சிந்திக்கத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென … Read more

இன்டெல் நிறுவனத்தின் AI பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமனம்..

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப் பூ டான் ஒரு இன்டெல் குறிப்பில் இதை அறிவித்துள்ளார். கர்நாடகாவின் பெல்காம் பகுதியைச் சேர்ந்த சச்சின் கட்டி, 55, தனது உயர்நிலைப் படிப்பை பெல்காமில் முடித்த நிலையில் பி.யூ.சி மற்றும் உயர் படிப்புகளுக்காக மும்பைக்குச் … Read more

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம்…

கர்நாடகாவின் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஓம் பிரகாஷ், இன்று காலை பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். 68 வயதான முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியின் உடலில் பல இடங்களில் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இது கொலைக்கான கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பெங்களூருவின் மிகவும் ஆடம்பரமான எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றடுக்கு கொண்ட வீட்டின் தரை தளத்தில் … Read more

கவர்னர் ஒரு தபால்காரர் மட்டுமே, “அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் மீண்டும் தோற்கடிப்பார்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே ஆளுநரின் அதிகாரம் தபால்காரரின் அதிகாரம் மட்டுமே என்ற திமுகவின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது”  “அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் மீண்டும் தோற்கடிப்பார்கள்  தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்வி களுக்கு  பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- தொகுதி மறுவரையறையை … Read more

உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜக எம்பிக்கு ஜெயராம் ரமேஷ் கண்டனம்

டெல்லி உச்சநீதிமன்றம்  குறித்து சர்ச்சை  கருத்து தெரிவ்த்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபேக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜனாதிபதிக்கும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு விதித்துள்ள … Read more

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க கோரி மதிமுக தீர்மானம்

சென்னை நேற்று நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை நீக்கக் கோரி தீர்மானம் இயற்றபட்டுள்ளது. நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் தாயகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறவிவேற்ற;ப்பட்டன,  அவ்வாறு ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு, ”கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழகம் … Read more

மதிமுக நிர்வாகிகள் துரை வைகோ ராஜினாமாவை ஏற்க மறுப்பு

சென்னை மதிமுக நிர்வாகிகள் துரை வைகோவின் ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளனர். நேற்று ம.தி.மு.க முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ராஜினாமா செய்தார். துரை வைகோ தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் தெரிவித்தார். துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக, ம.தி.மு.க … Read more