எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

சென்னை: ‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். எல்பிஜி தட்டுப்பாடு தொடர்கிறது; நகர எரிவாயு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்துகிறது. சுத்திகரிப்பு ஆலைகள் வீடுகளுக்கான உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருகின்றன, அதே நேரத்தில் வணிகப் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. பீதியால் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் … Read more

‘அரசியலில் முற்றுப்புள்ளிகள் இல்லை’; ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை….

டெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது என ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற  பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினர் பதவியில் இருந்து  20 மாநிலங்களைச் சேர்ந்த 59 மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, ஏப்ரல் முதல் ஜூலை மாதத்திற்குள் ஓய்வுபெற உள்ளனர்.  இந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரியாவிடை  நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பிரதமர்  மோடி பேசும்போது, “ மாநிலங்களவையில் பல்வேறு … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு…

சென்னை:  பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட  வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுகவில் செந்தில் பாலாஜி உள்பட  அமைச்சர்கள் உள்பட முக்கிய நபர்கள்  பலர்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது மக்களிடையே திமுக மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த நிலையில்,  அதிமுக முன்னாள் … Read more

5ஆண்டுகளில் 5உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை! அன்புமணி விமர்சனம்

சென்னை: 5ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளர். திமுகவின் கடந்த  5 ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, உயர்கல்வி நிறுவனங்களை சீரழித்து புதை குழியில் தள்ளியது தான், திமுக அரசின் சாதனை என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் … Read more

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகுமா? நாளை தமிழ்நாடு வருகை தருகிறார் பியூஸ் கோயல்…

‘சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதுகுறித்து விவாதித்து இறுதி செய்ய பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக … Read more

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை…

சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை.  இந்த வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து  அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மே 10ந்தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது. திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது; அத்துடன், தற்போது இயங்கிவரும் ரயில் சேவைகளிலும் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும், மே … Read more

கட்சி பிரமுகரே எதிர்ப்பு எதிரொலி: ரஜினியிடம் பகிரங்கமான மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜுனா

 சென்னை:  தவெக கட்சி பிரமுகரே ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு  எதிர்ப்பு  தெரிவித்தததுடன், அதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என  அவர் முன்னிலையில் பேசிய நிலையில், ரஜினியிடம் பகிரங்கமான மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜுனா/ .இந்த நிலையில், கொளத்தூரில் இன்று நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசும் போது, “ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் … Read more

போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல்! திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

சென்னை:  தமிழ்நாட்டில், போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என   திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி  கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் என்.டி. ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை கே.கே நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார். தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி … Read more

 ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை…

சென்னை:  ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!  என தவெக  ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.வின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக விமர்சித்திருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வினையாற்றி வருகின்றன. ரஜினி ரசிகர்கள், தவெகவுக்கு எதிராக களமிறங்குவோம் என எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more

சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் உடனடியாக e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தல்!

சென்னை: சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் ஆன்லைனிலோ அல்லது  எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கோ சென்று, உங்களது e-KYC பூர்த்தி செய்ய  மத்தியஅரசு  அறிவுறுத்தி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுளளது. இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அனைத்து உள்நாட்டு எல்பிஜி (LPG) நுகர்வோரும் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (e-KYC) பூர்த்தி செய்வது தற்போது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் கேஸ் அலுவலகத்திற்கு … Read more