அடுத்த வருடம் கேளம்பாக்கம் – விமான நிலையம் மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்

சென்னை அடுத்த வருடம் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்போத் மக்களுக்கு மிகவும் பயன் அளித்து வருகிறது.   இந்த மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விரைவில் சென்னை நகர் முழுவதுமே மெட்ரோ ரயில் சேவை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  கேளம்பாக்கம் மற்றும் சென்னை மிமான … Read more

ரூ.8 கோடி செலவில் சென்னை நகர சாலைகளில் புதிய பெயர்ப் பலகைகள்

சென்னை விரைவில் சாலைகளில் புதிய பெயர் பலகைகள் வார்டு எண், மண்டல எண் மற்றும் பிரிவு விவரங்களுடன் ரூ.8 கோடி செலவில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மாநகராட்சி ஒரு சில பகுதிகளில் சாலைகளில் புதிய பெயர் பலகைகளைச் சோதனை ரீதியாக அமைத்தது.  அதில் சாலைகளின் பெயர்களுடன் அந்த வார்டு எண், மண்டல எண், பிரிவு ஆகிய விவரங்கள் இருந்தன.  மேலும் அந்த பகுதியில் உள்ள முக்கிய தலங்களின் படங்களும் … Read more

கேமிங் நிறுவனங்களாலும் புறக்கணிக்கப்பட்ட ரஷ்யா

மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததால் ரஷ்யாவில் புகழ்பெற்ற கேமிங் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை நிறுத்தி உள்ளன. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதையொட்டி உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு சில சில நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.ஒரு சில நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது நிறுவன செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. தற்போது அந்த வரிசையில் சில சில கேமிங் நிறுவனங்கள் இணைந்துள்ளன,  ரஷ்யாவில் எபிக் கேம்ஸ், ஆக்டிவிஷன் Blizzard, CD Projekt … Read more

பிக்பாஸில் அசத்தும் பிந்து !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழும் பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் இவர், தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழைப்போல … Read more

தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  07/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 43,382 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,47,54,613 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,51,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,017 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 512 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,10,740 பேர் குணம் அடைந்து வீடு … Read more

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன எனத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல்வேறு துறைகளிலும் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   இவை அனைத்தும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி நடந்து வருகிறது. அவ்வகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  உத்தரவுப்படி மக்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்த 234 தொகுதிகளிலும் … Read more

மேற்கு வங்க ஆளுநருடன் முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இன்று மேற்கு வங்காள சட்டமன்றத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்ற இருந்தார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடைபெற்றதாகக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பாஜக … Read more

மார்ச் 26ந்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்: சிஎஸ்கே மோதும் அணிகள் மற்றும் தேதிகள் விவரம்…

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல்2022 போட்டிகள் வரும் 26ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த தேதிகளில்  எந்த அணியுடன் மோதுகிறது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளதால் போட்டிகளும் அதிகரித்துள்ளது. அதன்படி,  இத்தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 … Read more

தேசிய பங்குச் சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 7 நாள் சிபிஐ காவல்…

டெல்லி: தேசிய பங்குச் சந்தை முறைகேடுகள் தொடர்பான இன்று காலை சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்ட்ட  முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் 7 நாள் சிபிஐ காவல் வழங்கி உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநராக 2013 முதல் 2016 ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா  பணிபுரிந்து வந்தார். அவரது பணிக்காலத்தின்போது, தமிழகத்தைச் சேர்ந்த  ஆ்னந்த் சுப்பிரமணியன் என்பவரை நிர்வாக செயலாக்க அதிகாரியாக நியமித்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. … Read more

ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்… இளையராஜா ட்வீட்

ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக் ஸ்டூடியோ-வுக்கு இளையராஜா சென்றபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட ரஹ்மான் “மேஸ்ட்ரோ-வை வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் குழுவுக்காக இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு, “ஏ.ஆர். ரஹ்மானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன் அதனை விரைவில் நிறைவேற்றவேன்” என்று தனது ட்விட்டர் பதிவின் மூலம் பதிலளித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. தற்போது துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மேஸ்ட்ரோ இளையராஜா துபாயில் உள்ள ஏ. ஆர். ரஹ்மானின் பிர்தவுஸ் … Read more