திமுக வசமானது திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகள்… கொங்குமண்டலத்திலும் அதிமுகவை வீழ்த்தி முன்னிலை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சியை திமுக கூட்டணி  கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மற்ற மாநகராட்சிகளை யும் கைப்பற்றும் சூழல் எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்திலும் அதிமுகவை வீழ்த்தி திமுகவை முன்னிலையில் உள்ளது. தமிழழ்நாட்டில்  கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, அனைத்து இடங்களிலும் பெரும்பாலாக திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன. தமிழ்நாட்டில் … Read more

முதல்முறையாக குமரி கப்பியறை பேரூராட்சியை கைப்பற்றியது திமுக, இரணியல் மண்டைக்காடை கைப்பற்றியது பாஜக…

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக குமரி பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. அதே வேளையில் குமரி மாவட்டம் இரணியல் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான  வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற்று முடிவடைந் தது. இதையடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268  … Read more

முன்ளாள் முதல்வர் ‘எடப்பாடி’ பழனிச்சாமி தொகுதியில் திமுக முன்னிலை….

சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியிலேயே அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.  எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சேலம் மாநகராட்சியில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் வாக்கு எண்ணிக்கை … Read more

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் பரபரப்பு! இது கடலூர் சம்பவம்….

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் வாக்கு எண்ணிக்கை மையத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு. கட்சியினரும் குவிந்தனர். இதையடுத்து, அந்த அறையியூன் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் எடுக்கப்பட்டன. இதனால், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதமானது. கடலூர் மாநகராட்சியில் ஒரு தனியார் பள்ளியில்ரு தனியார் பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்போது பதிவான வாக்குகள் கொண்ட  மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த … Read more

வாக்குப்பதிவு ஏன் குறைந்தது? : கமலஹாசன் விளக்கம்

சென்னை நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து நடிகர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் 5 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.  அப்போது அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.  இந்த விழாவில் கமல் உரையாற்றி உள்ளார். அவர் தனது உரையில் “வணிகம் செய்ய நாம் இங்கு … Read more

‘டிங் டாங்’ : டைட்டில், பர்ஸ்ட் லுக் பிரபுதேவா வெளியிட்டார்!

பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’. இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். வி ஆல் புரடக்சன், ஆர்.ஆர்.பி. நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ராம்நாத் கவனிக்கிறார். நடனம்- வினோத் ,சண்டைக் காட்சிகள் வீரா, தயாரிப்பு ராபர்ட் … Read more

செல்போன் மூலம் தாம் வாக்களிப்பதைப் படம் பிடித்த  பாஜக மேயர் மீது  வழக்கு

கான்பூர் தாம் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் பாஜக மேயர் பிரமீளா பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது கான்பூர் நகர மேயர் பிரமீளா பாண்டே அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகும், இவரை மக்கள் ‘ரிவால்வர் தீதி (அக்கா)’ என்று அழைத்து வருகின்றனர். இதற்கு காரணம், இவர் மேயர் ஆவதற்கு முன்பு உறுப்பினராக இருந்த நேரத்தில், அவர் தனது உரிமம் பெற்ற ரிவால்வருடன் ஜீப்பில் வலம் வருவார். ஆகவே அவரை  ‘ரிவால்வர் தீதி’ என்று அழைப்பார்கள். இவர், … Read more

தனியார் நிதி நிறுவனத்தின் மீது ரூ.200 கோடி மோசடி புகார் : உரிமையாளர் தலைமறைவு

மதுரை ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ராஜா மற்றும் அவர் சகோதரர் ரமேஷ் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளதக சொல்லப்படுகிறது.  இதையொட்டி ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் … Read more

தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,45,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 70,379 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,39,61,280 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,45,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 37,981 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 3,692 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,93,703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தி.மு.க. வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.