மனைவி கிருத்திகா உடன் வந்து வாக்களித்தார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து  ஜனநாயக  கடமையை நிறைவேற்றினார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான … Read more

திருச்சி, திருப்பூரில் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு…

சென்னை: திருச்சி, திருப்பூரில் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரம் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம்‌ ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலையிலேயே வாக்களிக்க வந்த பாதுமக்கள், எரிச்சல் அடைந்தனர். அதையடுத்து புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டுவாக்குப்பதிவு தொடங்கியது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…! வாக்காளர்கள் ஆர்வம்…

சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5மணி முதல் 6மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என … Read more

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து என்பவர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த 2004-ம் … Read more

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இதுகுறித்து கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் முன் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு என்றும் துணை ராணுவ படையினர் தேவையில்லை என்றும் … Read more

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில் கற்பித்த கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர், வகுப்புகளை நடத்தும் போது ஹிஜாபை அகற்றுமாறு கல்லூரி கூறியதை அடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், தன்னை சாந்தினி என்று அடையாளம் காட்டிய விரிவுரையாளர், “நான் ஜெயின் பியூ கல்லூரியில் மூன்று … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு … Read more

தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 81,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,37,28,093 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,970 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 4,229 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,84,278 பேர் குணம் அடைந்து வீடு … Read more

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஒரு லட்சம் போலிசார் பாதுகாப்பு : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இது குறித்து இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். பழனி குமார் தனது பதிலில், “நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30.735 வக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மக்கள் அச்சமின்றி வாக்களிக்க … Read more

பாஜக அரசில் ஊழல் செய்தவர்கள் ஆனந்தமாக உள்ளனர் : பாஜக எம்பி வருண் காந்தி தாக்கு

டில்லி பாஜக அரசை அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் மறைந்த சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ஆவார்.  இவர் கடந்த ஓராண்டாக பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  குறிப்பாக வேளாண் சட்டம் அமலாவதில் இவர் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். பிறகு இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த போது இந்த முடிவை முன்பே … Read more