காஞ்சிபுரத்தில் சோகம்: வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜானகிராமன். இவரை ஆதரித்து நேற்றுதான் முதன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று அவர் திடீரென தற்கொலை … Read more

மலை இடுக்கில் சிக்கிய கேரள இளைஞரை மீட்கப்பட்டது எப்படி ? வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் உள்ள குறும்பாச்சி மலையில் மலையேற்றம் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிக்கொண்டார். திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் குறும்பாச்சி மலையை ஒட்டிய சேராடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவருடன் வந்த நண்பர்கள் இருவரும் அவரை மீட்க பெரிதும் போராடினர். பின்னர் அருகில் உள்ள மலை கிராமத்திற்கு சென்று தகவல் … Read more

சினிமா விமர்சனம் : மகான்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான். காந்தி மகானாக விக்ரம். சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தைச் சேர்ந்த அவரை மதுவின் தீமைகளை சொல்லி சொல்லி வளர்க்கிறது குடும்பம். ஆனால், மது விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகிறார். அவரது ஐ.பி.எஸ். மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ்) மூலம் சங்கடங்கள் ஏற்படுகிறது. அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். … Read more

சினிமா விமர்சனம் : எப்.ஐ.ஆர்.

அபூபக்கர் அப்துல்லா என்கிற பயங்கரவாதி, இலங்கை தலைநகர் கொழும்புவில் எட்டு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகிறான். இந்தியாவிலும் பங்கரவாத செயல்களைச் செய்ய திட்டமிடுகிறான். அவனை இந்திய உளவுத்துறை வலைவீசி தேடி வருகிறது. அந்தத் தேடலில் எதிர்பாராமல், அப்பாவி இஸ்லாமியரான விஷ்ணு விஷால் சிக்குகிறார். அவர்தான் பயங்கரவாதி அபூபக்கர் அப்துல்லா என உளவுத்துறை நினைக்கிறது. அவர் மீண்டாரா, பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதா என்பதுதான் கதை. மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா, கவுதம் மேனன் … Read more

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இரண்டு வாரம் தடை!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்த இரண்டு வாரங்கள் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் கமல்பண்ட் உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள பள்ளி வாசல், பியு கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் மற்றும் அதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவில் எந்தவிதமான கூட்டங்கள், போராட்டம் அல்லது போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஒரே சீருடை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, உடுப்பியில் … Read more

விக்ரமின் ‘மகான்’ இன்று இரவு அமேசான் ப்ரைமில் வெளியாகிறது….

விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். From tonight #Mahaan will be all yours ❤️ #Mahaan streaming from tonight on @PrimeVideoIN 🔥#MahaanOnPrime pic.twitter.com/gea1qcz2ko — Seven Screen Studio (@7screenstudio) February 9, 2022 இந்தப் படம் அமேசான் ப்ரைமில் இன்று இரவு … Read more

இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை ஏராளமான செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது. இந்த நிலையில், துருவச் சுற்றுப்பாதையில் ஆய்வு செய்யும் வகையில்  1,710 கிலோ எடை உள்ள  பி.எஸ்.எல்.வி.-சி52  செயற்கைகோளை வரும் 14ந்தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளது. நடப்பாண்டு இறுதியில் சந்திரயான்3 ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக ஏற்கனவே இஸ்ரோ … Read more

கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.808 கோடி காப்பீடு அளித்த மத்திய அரசு

டில்லி கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்களுக்கு ரூ.808 கோடி காப்பீட்டு தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை   இன்றைய காலை தகவலின்படி இதுவரை இந்தியாவில் 4.24 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 5.05 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4.10 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 8.92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனா குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார … Read more

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலங்களுக்கு ஏற்ப நீட் தேர்வு ரத்து : கே எஸ் அழகிரி

நாகர்கோவில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் மாநிலங்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.   தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகின்றது.   இதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது  நாகர்கோவிலில் உள்ள வேப்ப மூடு சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி  திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு … Read more

தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 09/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,10,494 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,28,70,191 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,837 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 16,473 பேர் குணம் … Read more