சினிமா விமர்சனம் : எப்.ஐ.ஆர்.

அபூபக்கர் அப்துல்லா என்கிற பயங்கரவாதி, இலங்கை தலைநகர் கொழும்புவில் எட்டு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகிறான். இந்தியாவிலும் பங்கரவாத செயல்களைச் செய்ய திட்டமிடுகிறான்.

அவனை இந்திய உளவுத்துறை வலைவீசி தேடி வருகிறது. அந்தத் தேடலில் எதிர்பாராமல், அப்பாவி இஸ்லாமியரான விஷ்ணு விஷால் சிக்குகிறார்.

அவர்தான் பயங்கரவாதி அபூபக்கர் அப்துல்லா என உளவுத்துறை நினைக்கிறது.

அவர் மீண்டாரா, பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதா என்பதுதான் கதை.

மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா, கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடிக்க, மனு ஆனந்த் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட இருக்கும் இந்தத் திரைப்படம் நாளை (11ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் எப்படி இருக்கிறது?

விஷ்ணு விஷாலின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. படித்த படிப்புக்கு ஏற்ற – உரிய சம்பளத்தில் வேலை அமையவில்லையே என்கிற ஆதங்கம், காதல் சோகம், அம்மா மீது காட்டும் பாசம், தன் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படும்போது எழும் ஆவேசம் என சிறப்பாக, தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரைசா வில்சன் திரை வாழ்வில் அவருக்கு முக்கியமான படம் இது. அதிரடியான கதா பாத்திரம். அவரும் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதே போல மஞ்சிமா மோகன், ரேபா மோனிகா, கவுதம் மேனன் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

துப்பறியும், அதிரடி கதை அம்சம் உள்ள படம். இதற்கு ஏற்ப இசை, ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை. அதை நேர்க்கோட்டில் அழகாக எடுத்துச் செல்லும் எடிட்டிங்.

இயக்குநர் மனு ஆனந்த்

அறிமுக இயக்குநரான மனு ஆனந்த், தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை முதல் படத்திலேயே வெளிப்படுத்தி இருக்கிறார். திரைக்கதைக்கு மிகவும் உழைத்திருக்கிறார். அதே போல ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தி.

நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என ஒவ்வொருவரிடம் படத்துக்கு தேவையானதை பெற்றிருக்கிறார்.

இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்த கதை. என்பது மிகவும் சிக்கலான விசயம். அதை சரியான விதத்தில் கையாண்டு, திரைக்கதை அமைத்திருக்கிறார்.

துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு குறையாதா திரைப்படம்.

அதே நேரம் சென்டிமெண்ட் காட்சிகளையும் அளவோடு வைத்திருக்கிறார்.

ஆகவே அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.