உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் காரணமாக, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு இதுவரை எந்த உதவியையும் இந்தியா செய்யவில்லை. இந்த … Read more

உங்களில் ஒருவன்… நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்றுப் புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடைபெற்ற விழாவில் இன்று வெளியிட்டார். ராகுல் காந்தி பேசியபோது, “எனது ரத்தம் இந்த மண்ணோடு கலந்திருக்கிறது” என்று உருக்கமாக கூறினார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக பேசிய என்னை நீங்கள் ஏன் தமிழ் நாட்டிற்காக வாதிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் தமிழன்” என்று கூறியதும அந்த அடிப்படையில் தான் என்று குறிப்பிட்டார். His … Read more

சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த பாஜக எம் பி

பசில்நகர், உத்தரப்பிரதேசம் பாஜக மக்களவை உறுப்பினர் சங்கமித்ரா தனது தந்தையும் சமாஜ்வாதி வேட்பாளருமான சுவாமி பிரசாத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சுவாமி பிரசாத் மவுரியா இருந்து வந்தார்.   இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் பகுஜன் சமாஜ கட்சித் தலைவி மாயாவதி இவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து இருந்தார்.  பிறகு அதிருப்தி காரணமாக இவரை மாயாவதி கட்சியில் இருந்து நீக்கியதால் இவர் பாஜகவில் இணைந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு … Read more

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு?

சென்னை: தமிழ்நாட்டில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கல்வி நிலையங்கள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆண்டு இறுதித்தேர்வு நேரடி தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நிலையில், நடப்பாண்டு ஆஃப் லைனில் … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் சிறை கைதிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள்! உக்ரைன் அதிபர் தகவல்…

கீவ்: ரஷ்யாவிற்கு எதிரான போரில்  இராணுவ அனுபவமுள்ள கைதிகளை ஈடுபட விரும்பினால், அவர்களையும் உக்ரைன் அரசு விடுவிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது இன்று 5வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா இன்று சற்று தாக்குதலை குறைத்துள்ளது. அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே பெலாரசில் இன்று பேச்சுவார்த்தையும் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷியா ராணுவ மும் அறிவித்து … Read more

மேயர், துணைமேயர் உள்பட மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்! உயர் நீதிமன்றம்

சென்னை: நகர்பபுற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து, மேயர், துணைமேயர் உள்பட தலைவர்கள் தேர்தல் ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த  மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும், சிசிடிவி நடைமுறை தொடரணும்  என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பாலான வெற்றிகளை திமுக  பெற்றுள்ளதால், மேயர், துணைமேயர் உள்பட தலைவர்களின் பதவிக்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ந்தேதி நடைபெற உள்ளது. … Read more

உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது! ரஷியா ஒப்புதல்..

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு காயம் ஏற்பட்டுள்ளது என்று ரஷியா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. உக்ரைன் மீது இன்று 5வது நாளாக ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே ஊடகம் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை … Read more

மாறன் ட்ரெய்லர் இன்று ரிலீஸ்…

தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது மாறன். #MaaranTrailer From Today! #Maaran streaming soon on @disneyplusHSTam #MaaranOnHotstar@dhanushkraja @SathyaJyothi@karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @RIAZtheboss pic.twitter.com/uWmRJ2iVU6 — Diamond Babu (@idiamondbabu) February 28, 2022 இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் : இன்று ஐநா பொதுச்சபை அவசரக் கூட்டம்

நியூயார்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்க இன்று ஐநா பொதுச்சபை கூட்டம் கூடுகிறது. ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது நடத்தி வரும் போர் தொடர்கிறது.  இதனால் உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன.  ரஷ்ய விமானப் படைகள் குண்டு வீசி உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களை அழித்துள்ளனர்.  இதனால் அந்நாட்டில் விமான போக்கு வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தினசரி பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  பல வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாததால் அண்டை … Read more