குடியரசு தலைவருக்கு கெடு: ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பதிலடி…

டெல்லி:  உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கெடு விதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மசோதாக்களுக்கு 3 மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வழக்கில் உச்சநீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கெடு … Read more

மோதல் எதிரொலி: கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு

சென்னை:  கட்சி விவகாரத்தில் மதிமுக நிறுவனர் வைகோ மற்றும் மல்லை சத்யாவுடன் மோதல் எதிரொலியாக வைகோவின் மகனும், திருச்சி மதிமுக எம்.பி.யுமான துரைவைகோ  கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை கோவை அறிவித்து உள்ளார். இது மதிமுகவில்  மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமகவில், தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நிறுவனர் ராமதாஸ் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுகவிலும் தந்தைக்கும் மகனுக்கும் … Read more

உச்சநீதிமன்ற கெடு விவகாரம்: ஜக்தீப் தன்கர் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை: குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் கெடு  விதித்துள்ள விவகாரத்தை கடுமையாக சாடிய துணைகுடியரசு தலைவலர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். ”சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல” ஜனநாயக விரோத சக்திகளுக்கு எரிச்சலை  என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒருமாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன் மசோதாக்களுக்கு … Read more

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில்,  டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசினார். மசோதாவுக்கு அனுமதி மற்றும் குடியரசு தலைவருக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஆளுநர் ரவியின் டெல்லி விசிட் பரபரப்பாக பேசப்படுகிறது. பல்கலைக்கழக வேந்தர் தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் … Read more

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு!

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில், அதிமுகவும் தனது தேர்தல் பணிகளை தொடங்கியது. இந்த நிலையில்,  சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தேமுதிக, பாமக, … Read more

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு! மத்தியஅரசு அனுமதி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்,   வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து,  இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையமும்  அனுமதி அளித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் ரூ. 48 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு, தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் (Tamil Nadu Coastal Zone Management Authority) அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மொத்தம் 466 கி.மீ … Read more

டெல்லியில் பயங்கரம்: அதிகாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி…

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையிலேயே குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெல்லியில் நேற்று (ஏப்.18)  திடீரென கனமழை கொட்டியது. திடீர் கோடை மழை காரணமாக டெல்லியின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையின் , டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று … Read more

கன்னியாகுமரி மாவட்டம்,  சுசீந்திரம், ஆஞ்சநேயர்

கன்னியாகுமரி மாவட்டம்,  சுசீந்திரம், ஆஞ்சநேயர் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் … Read more

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட 506 பேர் கைது…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பது குறித்து குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. 4 மாடிகளைக் கொண்ட 6 தொகுதிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மொத்தம் 895 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 506 பேர் பல்வேறு குடிநுழைவு விதிமீறல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர், அதில் 58 … Read more

இன்று பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை இன்று பூந்தமல்லி போரூர் இடையே  மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.   விரைவில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.  இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது. மேலும் பூந்தமல்லி – போரூர் … Read more