பொதுச்செயலாளர் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி…

சென்னை :  அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து,  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று 3வது வழகை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக சிதறியது. இதையடுத்து, … Read more

லாக்-அப் மரணம் : காவல் நிலையங்களில் சிசிடிவி வேலை செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது. “கடந்த எட்டு மாதங்களில், 11 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இந்த நிலையங்களில் சிசிடிவி சரியாக வேலை செய்யவில்லை என்பது கவனிக்கப்பட்டது. எனவே, ‘காவல் நிலையங்களில் சிசிடிவி போதுமான அளவு செயல்படவில்லை’ என்ற தலைப்பில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் … Read more

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

டெல்லி: மத்தியஅரசு நடப்பாண்டுக்கான (2025) தேசிய  கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசை – சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. 2025 தேசிய நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல, இதில் சென்னை IIT மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம்  2வது இடம் பிடித்துள்ளது, மும்பை … Read more

துரோகம் தலைவிரித்து ஆடுகிறது: என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி, எடப்பாடி மீது கடும் தாக்கு…!

சென்னை: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி தினகரன், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் , எடப்பாடியை கடுமையாக சாடியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் கடந்த முறை இருந்த ஓபிஎஸ் அணி, அமுமக கட்சி உள்பட சில கட்சிகள் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி போன்றோர்களை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி கடும் … Read more

உயர்ந்து வரும் கடல்நீர் மட்டம்: சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம்!

சென்னை: உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தால்  சென்னை  உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. புவி வெப்பமாதல் கரியமில வாயு உமிழ்வு உள்பட பல்வேறு  காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால்,  சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2100ல் தமிழ்நாட்டின் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடல்நீர் மட்டம் எவ்வளவு உயரும் வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலையும் … Read more

3நாள் தொடர் விடுமுறை: இன்றுமுதல் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை; வார இறுதி விடுமுறை  நாள் உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் வசதிக்காக இன்றுமுதல் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்  என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில், முகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4), மீலாது நபி பண்டிகை … Read more

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள் எம். செந்தில்குமார் மற்றும் திருமதி அனிதா சுமந்த் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். நீதிபதி பி.என். பிரகாஷ் நடத்திய விசாரணையில், கோயிலுக்கு அடுத்துள்ள ஒரு பழைய பள்ளி வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவது தெரிந்தது. கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜில் பல ஆண்டுகளுக்கு … Read more

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு   ஏற்கனவே சோதனை  முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும்  திட்டத்தை சென்னை மாநகராட்சி  அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்கள் பலர் நாயக்கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் நாய் வளர்ப்பு குறித்து கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், நாய்களுக்கு தெருவில் உணவு அளிக்ககூடாது என்றும், அதற்கு … Read more

தேர்தல் வாக்குறுதிகளில் தோல்வி – மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது,  இதற்காக  மக்களிடம் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்”  பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலின்  திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  … Read more

ஆப்கானிஸ்தானில்  நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது… தொடரும் மீட்பு பணி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு நேசக்கரம் நீட்டி,  நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை (செப்டம்பர் 2ந்தேதி)  ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலமுறை நில அதிர்வுகளும் … Read more