தமிழக சட்டசபை தேர்தல்2026: அரசியல் கட்சிகளை சார்ந்த 222 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கான நட்சத்திர பேச்சாளர்கள் 222 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது.  மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட … Read more

பங்குனி பெருவிழா – அறுபத்து மூவர் திருவிழா: மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: பங்​குனி பெரு​விழா  மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை  முன்​னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவை (23.03.2026 – 01.04.2026) முன்னிட்டு, போக்குவரத்துச் சீரான முறையில் நடைபெறுவதையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், தேவைக்கேற்ப ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளிலும் R.K. Mutt சாலையிலும் போக்குவரத்துத் திசைதிருப்பல்கள் அமல்படுத்தப்படும்  என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 10நாட்கள் … Read more

திமுக கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்​னணி ஆதரவு! பழ.நெடுமாறன் தகவல்

தஞ்சாவூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்ட​ணிக்கு ஆதரவு அளிப்​ப​தாக தமிழர் தேசிய முன்​னணி நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது.  அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி  தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் … Read more

மத்திய கிழக்குப் போர் பதற்றம்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு… ராகுல்காந்தி புறக்கணிப்பு…

டெல்லி:  மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க இன்று  (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதில் கலந்துகொள்ள இயலாது என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க இன்று  (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு  மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, வளைகுடா … Read more

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு….

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இதையடுத்து தேமுதிகவுக்கு ராஜ்யசபா பதவி வழங்கி கவுரவித்த திமுக நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகளையும் ஒதுக்கி உள்ளது. இதுதொடர்பாக,  உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும்  3 வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 79 வயதான சோனியா காந்தி  தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. ஏற்கனவே  , கடந்த ஜனவரி மாதம் சுவாச பிரச்சினைகள் காரனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த … Read more

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு மார்ச் 23ந்தேதி மாலை  முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதில் பாமக , அமமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் இடம்பெற்றன. இந்த கூட்டத்தின் முடிவில் … Read more

மயிலை கபாலீசுவரரை தரிசித்துவிட்டு நாளை மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் 5 முனைபோட்டி  நிலவி வருகிறது. ஆட்சிiயை  தக்க வைத்துக்கொள்ள திமுக தலைமை தேர்தல் பணிகளை முன்னெடுதது வருகிறது. அதற்கு டஃப் கொடுக்கும் வகையில், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் … Read more

உடல் எடையை குறைக்கும் GLP-1 வகை மருந்துகள்… தவறான பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு!

இந்தியாவில் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் GLP-1 வகை மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற அச்சம் காரணமாக, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைன் மருந்தக கையிருப்பு மையங்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள், வெல்ல்நஸ் கிளினிக்குகள் உள்ளிட்ட 49 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தல், தவறான விளம்பரங்கள், விதிமுறைக்கு புறம்பாக வழங்குதல் போன்ற மீறல்கள் இருப்பதை கண்டறிவதே … Read more

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: நெல்லை சீமையை பறைசாற்றும் ‘அல்வா’ தயாரிப்பு நிறுத்தம்…

திருநெல்வேலி:” நெல்லை என்றே நாவில் நீர் ஊரும். அந்த அளவிற்கு பிரபலமானது அல்வா. இந்த அல்வா தயாரிப்பும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தடை பட்டுள்ளது. நெல்லையின் பிரபலமான அல்வா தயாரிப்பு நிறுவனமான  சாந்தி சுவிஸ்ட்ஸ் நிறுவனம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அல்வா தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. விரைவில் விறகுகளைக்கொண்டு அல்வா தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால்,  வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.  … Read more