லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் – ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்… என புகைப்படங்களை பகிர்ந்து கடிதம் எழுதி  உள்ளார். தமிழக முதல்வரும் திமுக … Read more

தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்! தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்…

சென்னை; தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவல் இல்லை என மறுத்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை, தற்போது  பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்தான் என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால்  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் பரவின. இநத் நிலையில்,   தமிழ்நாட்டில் பரவுவது … Read more

ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது! திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது! எடப்பாடி குற்றச்சாட்டு

மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்  முன்னிலையில்,  போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாடு அரசு  பொய்யான தகவல்களை தந்து மக்களை ஏமாற்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தின்போது,  9ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள … Read more

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்பு

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் … Read more

”தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்’: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை:  டிஜிபி சங்கர் ஜிவால்  ஆகஸ்டு 31ந்தேதி  ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்யாத தமிழ்நாடு அரசு,  சீனியாரிட்டியில் 8வது இடத்தில் உள்ள வெங்கட்ராமன்-ஐ  பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது. இது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்டு ”மக்கள் கண்காணிப்பகம்” நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல சென்னை உயர்நீதிமன்றத்திலும் … Read more

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை! திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் பேட்டி…

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக  நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் இணைந்து பேட்டி கொடுத்தனர். தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளதாகவும்,  பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்றும்,  ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியதுடன், ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதுடன்,  52.07 மில்லியன் டாலர் ஏற்றுமதி உயர்வு பெற்றுள்ளது என்நனர். மேலும் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 … Read more

அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…

டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர  வீடுகளுக்குள் வெள்ளம்  புகுந்த நிலையில்,   பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை தொடங்காததால் 7000 பக்தர்கள் அவதி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள் 22 பேர் படுகாயமடைந்தார்கள். ஒரு வாரம் ஆன நிலையிலும் அந்த இடத்தை சீரமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறாததை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். யாத்திரை தொடங்குமிடமான கத்தாராவில் மட்டும் சுமார் 7000 யாத்ரீகர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பலர் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே … Read more

இந்தோனேசியாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு 20 பேர் மாயம்

இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் தொடர்பாக வன்முறை போராட்டம் வெடித்ததை அடுத்து குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராகப் பொறுப்பேற்ற முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியாண்டோ-வுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக இது உருவெடுத்தது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்பப்பெறுவதாக பிரபோவோ சுபியாண்டோ அறிவித்தார். ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் துணை ராணுவ போலீஸார் ஒரு இளம் டெலிவரி டிரைவரைக் கொல்வது … Read more

ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட புல்லட் ரயில் சேவைகள் ரத்து… காரணமென்ன ?

கனமழை காரணமாக வடகிழக்கு ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட சில புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், இப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் என்று வானிலை நிறுவனம் எச்சரித்தது. செப்டம்பர் 2 ஆம் தேதி பிற்பகலில் ஓமகாரி மற்றும் அகிதா நிலையங்களுக்கு இடையில் மழை காரணமாக அகிதா மாகாணத்தில் உள்ள ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஜேஆர் ஈஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த … Read more