கன்னியாகுமரி மாவட்டம்,  சுசீந்திரம், ஆஞ்சநேயர்

கன்னியாகுமரி மாவட்டம்,  சுசீந்திரம், ஆஞ்சநேயர் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் … Read more

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட 506 பேர் கைது…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பது குறித்து குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. 4 மாடிகளைக் கொண்ட 6 தொகுதிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மொத்தம் 895 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 506 பேர் பல்வேறு குடிநுழைவு விதிமீறல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர், அதில் 58 … Read more

இன்று பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை இன்று பூந்தமல்லி போரூர் இடையே  மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.   விரைவில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.  இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது. மேலும் பூந்தமல்லி – போரூர் … Read more

சென்னை விமான முனையத்தில் இருந்து  விரைவில் பேருந்து சேவை தொடக்கம்’

சென்னை விரைவில் சென்னை விமான முனையத்தில் இருந்து பேருந்து சேவை  தொடங்க உள்ளது. விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவையை பெற, உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக கோடை வெயில், கொட்டும் மழைக்காலத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர் விரைவில் சென்னை சர்வதேசவிமான நிலையம் உள்ளே இருந்து மாநகர போக்குவரத்து பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது சென்னை விமான … Read more

தக் லைஃப் படத்தின் ஜிங்குசா பாடல் வெளியீடு…

மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்குப் பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமலஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திற்கும் இந்த திரைப்படத்தில் கமலஹாசனுக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி என ஏராளமானோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 5ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் … Read more

40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குப் பயணம் செய்யவுள்ள இந்தியாவின் அடுத்த விண்வெளி ஹீரோ

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல IAF-ன் சுபான்ஷு சுக்லா தயாராகி வருகிறார். 1984ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் புகழ்பெற்ற விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் கழித்து இந்தியர் ஒருவர் மேற்கொள்ள இருக்கும் விண்வெளிப் பயணம் இதுவாகும். இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, மே 2025 இல் திட்டமிடப்பட்டுள்ள வரவிருக்கும் Axiom விண்வெளி பயணமான Ax-4 இல் பங்கேற்பார். இஸ்ரோ மற்றும் விண்வெளித் துறையின் உயர் அதிகாரிகளுடன் ஒரு உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்திற்குப் … Read more

பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி:  நாட்டின் இதிகாசமான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதை  பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாரதத்தின் பழமையானதும், இந்து மதத்தின் புனித நூலும்,   இதிகாசங்களுல் ஒன்றான பகவத் கீதை, மற்றும் பழமையான கலையான நாட்டிய நாடகத்தையும் யுனெஸ்கோ தனது பதிவேட்டில் சேர்த்து அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதை பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை. இதில் கடவுள் கிருஷ்ணன் கூறும் … Read more

மத்திய அரசு ஜி பி  எஸ் மூல்ம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து விளக்கம்

டெல்லி மத்திய அரசு ஜி பி எஸ் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முறை வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை குறித்து /விளக்கம் அளித்துள்ளது. ”செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் … Read more

ஒரு கை பார்ப்போம் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் சவால்

பொன்னேடி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இன்று/ பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வ மு.க.ஸ்டாலின் ”இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தருவோம், இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதி தரமுடியுமா? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது என அமித்ஷாவால் உறுதி அளிக்க முடியுமா? தமிழ்நாட்டிற்கு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி தரப்பட்டது … Read more

ஜக்தீப் தன்கருக்கு சி பி ஐ கண்டனம்

சென்னை உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு சிபிஐ மாநில செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் ”தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவைகளை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை புறக்கணித்து வந்தார். தமிழக ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, கவர்னரின் அத்துமீறல்கள் மீது நியாயம் வழங்க … Read more