உடல் எடையை குறைக்கும் GLP-1 வகை மருந்துகள்… தவறான பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு!

இந்தியாவில் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் GLP-1 வகை மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற அச்சம் காரணமாக, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைன் மருந்தக கையிருப்பு மையங்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள், வெல்ல்நஸ் கிளினிக்குகள் உள்ளிட்ட 49 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தல், தவறான விளம்பரங்கள், விதிமுறைக்கு புறம்பாக வழங்குதல் போன்ற மீறல்கள் இருப்பதை கண்டறிவதே … Read more

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: நெல்லை சீமையை பறைசாற்றும் ‘அல்வா’ தயாரிப்பு நிறுத்தம்…

திருநெல்வேலி:” நெல்லை என்றே நாவில் நீர் ஊரும். அந்த அளவிற்கு பிரபலமானது அல்வா. இந்த அல்வா தயாரிப்பும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தடை பட்டுள்ளது. நெல்லையின் பிரபலமான அல்வா தயாரிப்பு நிறுவனமான  சாந்தி சுவிஸ்ட்ஸ் நிறுவனம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அல்வா தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. விரைவில் விறகுகளைக்கொண்டு அல்வா தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால்,  வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.  … Read more

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! ஒப்பந்தம் கையெழுத்தானது..

சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 8 தொகுதிகளில்  2 பொது தொகுதிகளும் உள்ளது. திமுக மற்றும் விசிக இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது; இந்த உடன்படிக்கையின்படி, எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் விசிக … Read more

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி:   சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதித்து  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ வெளியிடுவதோ கூடாது என்று அறிவித்துள்ளது. மார்ச் 15ந்தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்தார். … Read more

வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான்! வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் ‘பஞ்ச்’

ராணிப்பேட்டை:  வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான்  என ராணிப்பேட்டையில் நடைபெற்ற  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்  சீமான் ‘பஞ்ச்’ டயலாக் பேசினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கி உள்ள நாம் தமிழர் கட்சி, 234 தோகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதகளப்படுத்தி உள்ளது. அதன்படி,  234 தொகுதிகளுக்கும் தலா 117 ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் … Read more

மாம்பழம் சின்னம் விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு…

சென்னை: பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து , பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணியை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், அவர் கட்சியின் சின்னம் உள்பட அனைத்தையும் கையாண்டு வருகிறார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாமகவினன் பெயர், கட்சியின் மாம்பழம்  மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து … Read more

என்டிஏ கூட்டணியில் தமாகாவுக்கு எத்தனை இடம்…? பியூஸ் கோயல் எடப்பாடியுடன் வாசன் சந்திப்பு…

சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை தொகுதி என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார். அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு  நேற்று (மார்ச் 23) மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. இநத நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னதாக,  அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலை போல 6 தொகுதிகளை ஒதுக்க … Read more

ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது! உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை: ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது என கூறியுள்ள  உச்சநீதிமன்றம்  ஹிந்து, சீக்கியர், புத்த மதத்திற்கே SC அந்தஸ்து பொருந்தும் என்றும்  தெரிவித்துள்ளது. வேறு மதத்தில் உண்மையான நம்பிக்கை இல்லாமல், இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தற்போது  பட்டியலிடப்பட்ட சாதி (SC) அந்தஸ்து குறித்து உச்ச நீதிமன்றம்,  முக்கிய விளக்கத்தை … Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்! நீதிபதி அதிரடி தீர்ப்பு….

மதுரை:  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன்  காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டகொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.  குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 30ந்தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிவடைந்து  ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு மார்ச் 23ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. தீர்ப்பை வாசித்தத உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, … Read more

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76% அதிகரிப்பு! மத்திய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  pதிமக ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76% அதிகரித்து உள்ளதாக மத்தியஅரசின் ஆய்வு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76 சதவீதமாகவும், மாணவர்கள் சேர்க்கை 71 சதவீதமாகவும் உயர்ந்து உள்ளதாக ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே என் வாழ்வின் … Read more